Posts

Showing posts from September 23, 2025
Image
 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் தமிழக அரசு நல்ல செய்தி?அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஆசிரியர் சங்கங்கள் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். ஒருவேளை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் கிட்டத்தட்ட 12 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடையும் என்று கூறப்படுகிறது. இதற்கு சுமார் 450 கோடி வரை செலவாகும் என்றும் கூறப்படுகிறது. சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துைற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டியில் கூறும் போது, "அரசியல் அட்டவணையில் 22 மொழிகள் உள்ளது. இதனை அனைவரும் கற்க வேண்டும் என்பதில் தவறு இல்லை. ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது. இருமொழி கொள்கை பயின்ற நமது பிள்ளைகள் உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். மொழிக்கொள்கையில் மட்டும் மத்திய அரசு உறுதியாக இருப்பது ஏன்? அவர்கள் 3-வது மொழியாக இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் வேலையைத்தான் செய...
Image
  TNPSC Group 4 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வை 11,48,019 பேர் எழுதியிருந்தனர். இதனால் ரிசல்ட் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து உள்ளனர். இந்த நிலையில் குரூப் 4 ரிசல்ட் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம், தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. தமிழகத்தில் அரசு பணிக்கு காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது டிஎன்பிஎஸ்சிதான். குருப் 4 தேர்வு ரிசல்ட் வருடம் தோறும் ஆண்டு கால அட்டவணையை வெளியிட்டு, டிஎன்பிஎஸ்சி அதற்கேற்றவாறு தேர்வுகளை வெளியிட்டு காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2A உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், தேர்வர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பாக இருப்பது குரூப் 4 பணியிடங்கள். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது, கொள்குறி வகையிலான எழுத...