PG TRB Results: ஷாக்... பி.ஜி டி.ஆர்.பி தேர்வில் தமிழில் மட்டும் 80,000 பேர் ஃபெயில்; இது எப்படி நடந்தது? ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PGTRB) தேர்வு முடிவுகளை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 1996 காலிப்பணியிடங்களுக்காக கடந்த அக். 12 அன்று நடைபெற்ற இத்தேர்வை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 809 மையங்களில் 2,20,412 தேர்வர்கள் எழுதினர். CV பட்டியல் வெளியீடு: அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 1:1.25 என்ற விகிதத்தில் தேர்ச்சிப் பட்டியல் (Shortlist) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு (CV) நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்புக் கடிதத்தை (Call Letter) டிஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். தபால் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் 84,000 பேர் தோல்வி மறுபுறம் பிஜி டிஆர்பி தேர்வில், தமிழ் தகுதித் தேர்வில் (Tamil Eligibility Test) மட்டும் சுமார் 84,000 பேர் தோல்வியடைந்த அதிர்ச்சி...