CBSE 10,+2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது... பிப்.17 முதல் தேர்வுகள்... முழு அட்டவணை! மத்திய பாடத்திட்டக் கல்விக் குழு (CBSE) 2026ம் ஆண்டுக்கான பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை வெளியிட்டுள்ளது. முன்பே அறிவித்தபடி, இரு வகுப்புகளுக்கும் தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 முதல் துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 24 அன்று வெளியிடப்பட்ட தற்காலிக (tentative) அட்டவணையைத் தொடர்ந்து, சில நாட்கள் கழித்து இறுதி அட்டவணை வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ கடந்த 2025 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகளை வெளியிடும் போது, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் என்றும், புதிய கல்விக் கொள்கை (NEP 2020) பரிந்துரையின்படி பத்தாம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை போர்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இது குறித்து சிபிஎஸ்இ தெரிவித்ததாவது, "மாணவர்களும் பள்ளிகளும் தயாராக இருக்கும் வண்ணம், வரவிருக்கும் தேர்வுகளுக்கான தற்காலிக அட்டவணையை 146 நாட்களுக்கு முன்பே வெளியிட்டோம்...