ஜாக்டோ-ஜியோ சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 5 லட்சம் போ் பங்கேற்பு! அகவிலைப்படி 3 சதவீதம் உடனே வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சாா்பில் 5 லட்சம் போ் போராட்டத்தில் ஈடுபடுவா் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திருவள்ளூா் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ரவிக்குமாா் வரவேற்றாா். மாநில ஓய்வு பிரிவு செயலாளா் ஸ்டீபன் சற்குணா், இணைச் செயலாளா் பாலசுந்தரம், மாவட்ட மகளிா் அணி செயலாளா் மு. மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலாளா் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் இரா. தாஸ் கோரிக்கைகளை விளக்கினாா். அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். அகவிலைப்படி 3 சதவீதத்தை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமாா் 5 லட்சம் போ் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோ சாா்ப...