Posts

Showing posts from November 18, 2025
Image
  மத்திய அரசுப் பள்ளிகளில் 14,967 காலி பணியிடங்கள்: டிச.4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கு டிச.4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126, நவோதயா பள்ளிகளில் 5,841 என மொத்தம் 14,967 ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 13,008 பணியிடங்கள் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர், முதல்வர், துணை முதல்வர், நூலகர் பதவிகளுக்கானவை. மீதமுள்ள 1,959 பணியிடங்கள் உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், மூத்த உதவியாளர், உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), நிர்வாகப் பணியாளர், நிதி அதிகாரி, பொறியாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுருக்கெழுத்தாளர் என ஆசிரியர் அல்லாத பிரிவில் வருகின்றன. இவற்றில் சேர விரும்புவோர் kvsangathan.nic.in மற்றும் cbse.nic.in வலைதளங்கள் மூலமாக டிச. 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கணினிவழியில் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிசம்பரில் வெளியிடப்படும். தன...
Image
  முனைவர் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஸ் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி பாரதி தாசன் பல்கலை.க்கு உட்பட்ட தேசியக் கல்லூரி விளையாட்டுத் துறையில் தனது முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கு பதிவு செய்து, அதற்கான முன்மொழிவை 2021 அக்டோபர் மாதம் சமர்ப்பித்தார். 'பள்ளிக் குழந்தைகளின் உடல் திறன் செயல்பாட்டை இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிதல்' எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான தகவல்களை அமைச்சர் அன்பில் மகேஸ் சேகரித்து, ஆய்வுக் கட்டுரையை தயாரித்தார். முனைவர் பட்ட வழிகாட்டியாக கல்லூரியின் உடற்கல்வி துறை இயக்குநர் டி.பிரசன்ன பாலாஜி இருந்தார். இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி நேற்று ஆய்வுக் கட்டுரைக்கான வாய்மொழித் தேர்வு தேசியக் கல்லூரியில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு தமிழ்நாட...