பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்! அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்! திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்கள். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 100 ஆண்டுகளை கடந்த பள்ளிகளை தமிழக அரசு கொண்டாடி வருவதாக குறிப்பிட்டார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, முன்னாள் முதல்வர் கலைஞர் பயின்ற திருக்குவளை பள்ளியில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பகுதிநேர ஆசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்த கேள்விக்கு, இது தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பே தலைமை செயலாளர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் என்பது பெயரளவில் தான், அவர்கள் முழுநேரமாக பணியா...