மேல்படிப்பு படிப்புக்கு பணம் இல்லாமல் தவிக்கும் விவசாய கூலித் தொழிலாளி மகள்
By ஆர்.ஜெயபிரகாஷ், விழுப்புரம்
First Published : 18 May 2013 04:46 PM IST
விழுப்புரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மேல்படிப்பு சேருவதற்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.
விழுப்புரம் அருகே உள்ள நங்காத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வெற்றிச்செல்வி. இவர் அருகாமையில் உள்ள சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவர் பிளஸ் 2 தேர்வில் 1056 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ்-182, ஆங்கிலம்-137, இயற்பியல்-192, வேதியியல்-183, உயிரியல்-185, கணிதம்-177 என மொத்தம் 1056 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர் பொறியியல் படிக்க விரும்புகிறார். ஆனால் இவரது தந்தை விவசாய கூலித் தொழிலாளி. இவரது தாய் மஞ்சுளாவும் விவாசய கூலி வேலை செய்து வந்தார். கட்டட வேலை செல்லும்போது கழி முறிந்து தலையில் விழுந்ததில் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளார். தந்தை முருகனின் கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் இவர்கள் குடும்பத்தை நடத்துகின்றனர்.இதனால் அரசுப் பள்ளியில் படித்து 1056 மதிப்பெண்கள் பெற்றும் அவர் விரும்பும் பொறியியல் படிப்பை படிக்க முடியாத நிலையில் உள்ளார் வெற்றிச்செல்வி. இவர் படிப்புக்கு யாரேனும் உதவி செய்ய விரும்பினால் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு முகவரி: முதன்மை கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம். நீங்கள் கொடுக்கும் உதவிநேரடியாக அந்த மாணவியின் படிப்புச் செலவுக்கு வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் முனுவாசமி தெரிவித்தார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment