முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொட்டையடித்து நூதன போராட்டம்
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறையை கண்டித்தும் மற்றும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தனசிங் ஐசக் மோசஸ் வரவேற்புரையாற்றினார்.
பள்ளிக்கல்வித்துறை
பின்னர் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கோட்டையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். மெரினா டவர் அருகே சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு, மாநிலப்பொறுப்பாளர்கள் 6 பேர் மட்டும் முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியிடம் தங்கள் மனுவை கொடுத்துவிட்டு வந்தனர்.
பின்னர் இதுகுறித்து மாநிலத்தலைவர் கே.மணிவாசகன் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்த பேரணியின் முக்கிய நோக்கம், பள்ளிக்கல்வி துறையை 3½ ஆண்டுகாலமாக அணுகி எந்தவித செயல்பாடுகளும் இல்லாத நிலை இருக்கிறது. இதில் முதல்–அமைச்சர் தலையிட்டு இதை சரிசெய்ய வேண்டும். மேலும், 6–ம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியரை விட, 12–ம் வகுப்பு எடுக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஊதியம் குறைவாக வாங்குகிறார் எனவே அவர்களின் ஊதியத்தை சரிசெய்ய வேண்டும்.
மொட்டையடித்த ஆசிரியர்கள்
அரசாணை 720–ல் திருத்தம் செய்ய வேண்டும். மேலும் தேர்வுப்பணிகளின் உழைப்பு ஊதியம் மற்றும் மதிப்பு ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணியை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் கை.இளங்கோவன், மாநிலச்செயலாளர் செ.வின்செண்ட், மாநிலப்பொருளாளர் சி.திருஞானகணேசன் உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்த 1500–க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியில் 400–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மொட்டையடித்து கலந்துகொண்டனர்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment