டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்..
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுக்கான (Group 2 & 2A) அறிவிப்பு கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2A உள்ளிட்ட அரசுத் தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பிரிவுகளில் 645 காலி பணியிடங்கள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தன.
மொத்தம் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: குரூப் 2 (நேர்காணல் பதவிகள்): 50 இடங்கள் குரூப் 2A (நேர்காணல் இல்லாத பதவிகள்): 595 இடங்கள்
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலிலும் தேர்ச்சி பெற்றால், அரசின் உயர்ந்த பதவிகளை பெற முடியும். இவர்களின் குறைந்த பட்ச சம்பளம் ₹36,900-₹1,35,100 (நிலை 16-18). குரூப் 2A (நேர்காணல் இல்லை) தேர்ச்சி பெற்று பணி பெறுபவர்களின் குறைந்த பட்சம் சம்பளம் ₹19,500-₹1,15,700 (நிலை 8-16, பதவியைப் பொறுத்து மாறுபடும்).
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (ஆகஸ்ட் 13 ஆம் தேதி) உடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் இந்த 2 தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவு பெறுகிறது. இன்னும்1 நாளே இருப்பதால் தேர்வு கடைசி நேர அவசரத்தில் விண்ணப்பங்களை அனுப்புவதை தவிர்த்து விட்டு இப்போதே அனுப்பலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். விண்ணப்பிக்க வேண்டிய இணைய தள முகவரி : https://www.tnpsc.gov.in/

Comments
Post a Comment