TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!!
குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும்.
13.89 லட்சம் பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்று முடிந்தது. இத்தேர்வில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், வருவாய் துணைத் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் (VAO) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கில் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு மொத்தம் 13,89,000 பேர் விண்ணப்பித்த நிலையில், 11,48,000 பேர் தேர்வில் பங்கேற்றனர். தற்போது, இந்த குரூப் 4 தேர்வுக்கான மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிப் பணியிடங்களை நிரப்பும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வும் கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் சுமார் 2.5 லட்சம் பேர் எழுதினர்.
இந்த தேர்வுக்கான முடிவுகள் இம்மாதம் (ஆகஸ்ட்) வெளியிடப்படும் எனவும், அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வெழுதியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலம் தொடர்ந்து தகவல்களை அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments
Post a Comment