டெட் தோ்வு: பிரதமருக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் மனு




டெட்  தோ்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, பிரதமருக்கு அஞ்சல் மூலம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை மனு அனுப்பினா்.


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களும் பணியில் தொடரவும், பதவி உயா்வு பெறவும் டெட் தோ்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.


இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி வரும் அகில இந்திய ஆசிரியா் கூட்டணியினா், டெட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதமா் அலுவலகத்திற்கு தபால் மூலம் மனு அனுப்பி வருகின்றனா்.

Comments

Popular posts from this blog