டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் என மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக பார்க்கலாம்.
குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு வரும் 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. மொத்தம் 32 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விரிவான விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்
உதவி பிரிவு அலுவலர்: 22,
உதவி பிரிவு அலுவலர் (நிதி): 03
உதவியாளர் (தலைமை செயலகம்): 5
உதவியாளர் (நிதி): 2
என மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
01.07.2025 தேதிப்படி அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்) பட்டியல் பழங்குடியின உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு.
கல்வி தகுதி:
உதவி பிரிவு அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவியில் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
உதவியாளர் பணிக்கு டிகிரியுடன் இளநிலையில் பட்டம் பெற்ற பிறகு, தமிழ்நாடு அமைச்சுப் பணியிலோ அல்லது தமிழ்நாடு நீதித்துறை பணியிலோ, உதவியாளராகவோ உதவியாளராகவோ அமைச்சுப் இளநிலை அல்லது அல்லது இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் அல்லது தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்துத் தேர்வில் (தாள்-I மற்றும் தாள்-II) தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் இறுதி தரவரிசையை தீர்மானிக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றால், அதிக கல்வித் தகுதி பெற்ற தேர்வர் தகுதிப் பட்டியலில் முதலிடத்தில் வைக்கப்படுவார்.
எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களும் கல்வித் தகுதியும் ஒரே மாதிரியாக இருப்பின், வயதில் மூத்த தேர்வர் தகுதிப் பட்டியலில் முதலிடத்தில் வைக்கப்படுவார். வயதும் ஒரே மாதிரியாக இருப்பின் விண்ணப்ப எண்ணிலிருந்து தீர்மானிக்கப்பட்டபடி, ஆணையத்திற்கு முன்னதாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த தேர்வர் தகுதிப் பட்டியலில் முதலிடத்தில் வைக்கப்படுவார்.
விண்ணப்பிப்பது எப்படி?
எழுத்து தேர்வு பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு தரத்தில் இருக்கும். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். விரிந்துரைக்கும் வகையில் வினாக்கள் இருக்கும். விருப்பம் உள்ள தேர்வர்கள், தேவையான கல்வி தகுதி மற்றும் அனுபவம் இருப்பதை உறுதி செய்த பிறகு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tnpsc.gov.in/Document/tamil/16_2025_Group%20VA_Tamil.pdf

Comments
Post a Comment