பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை




பணி நிரந்தரம் எதிர்பார்த்து காத்துள்ள பகுதி நேர ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கை, சட்டசபையில் எதிரொலிக்க வேண்டும்' என, தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், கோரிக்கை விடுத்துள்ளார்.



இது குறித்து, அவர் கூறியதாவது:

கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், 'பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என, வாக்குறுதி அளித்திருந்தது.


தமிழக அரசுப்பள்ளிகளில், 12 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர் அறிவியல், தையல், இசை, தொழில் கல்வி பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.


அதேநேரம் ஓவியம், கம்ப்யூட்டர், தையல் மற்றும் இசை பயிற்றுவிக்கும் சிறப்பாசிரியர்கள், 20 ஆயிரத்து 600 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறுகின்றனர். 'ஒரே கல்வித்தகுதியுடைய ஒரே பாட ஆசிரியர்களுக்கு, சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.


எனவே, 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில், பகுதிநேர ஆசிரியர்களாக இணைந்தவர்களை பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


தற்போது சட்டசபை கூடியுள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சட்டசபையில், இக்கோரிக்கையை எதிர்க்கட்சியின் எழுப்பி, கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog