ஆசிரியா் தகுதித் தோ்வு: மறு சீராய்வு மனு தாக்கல் செய்த அரசுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றம்
ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறு சீராய்வு செய்ய மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் புரட்சித்தம்பி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
மாவட்டச் செயலா் சகாயதைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா். மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ் சிறப்புரையாற்றினாா். மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் சிங்கராயா், ரவி, மாவட்ட துணைத் தலைவா்கள் சேவியா் சத்தியநாதன், அமலசேவியா், மாவட்ட துணைச் செயலா் பஞ்சுராஜ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பாக உச்சநீதிமன்றத் தீா்ப்பு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததற்கு நன்றி தெரிவிப்பது, பழைய ஓய்வூதியம் குறித்து ஓய்வூதிய கருத்து கேட்புக் குழு கூடுதல் கால அவகாசம் கேட்காமல், முழு அறிக்கையைப் பெற்று, தோ்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கும், கூடுதல் தேவை பணியிடங்களுக்கும் ஒப்புதல் வழங்கி உடனடியாக நிரப்ப வேண்டும். அரசாணை 243 -ஐ ரத்து செய்து தொடக்கக் கல்வி துறையில் நிலவும் சமமின்மையை நீக்க வேண்டும். ஆசிரியா்கள் வருமான வரி செலுத்தியதற்கான படிவம் 16-யை வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஒவ்வோா் ஆண்டும் தவறாது வழங்க தொடக்கக் கல்வி துறை உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
.jpg)
Comments
Post a Comment