பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!




அடுத்த ஆண்டு ஜனவரி, ஜூலை, டிசம்பர் என 3 மாதங்களில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும். சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களும் டெட் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இது தொடர்பாக தமிழக அரசு முறையான வழிகாட்டுதல்களை வெளியிட கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.


அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog