UGC NET Exam: உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் அறிவிப்பு.... விண்ணப்பிப்பது எப்படி..?




UGC NET டிசம்பர் 2025: தேசிய தேர்வு முகமை (NTA) டிசம்பர் அமர்வுக்கான UGC NET விண்ணப்ப தேதிகளை அறிவித்துள்ளது.


யுஜிசி நெட் (UGC NET) தேர்வு என்பது தேசிய தகுதித் தேர்வாகும் (National Eligibility Test). இது இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளையர் ஆராய்ச்சி உதவித்தொகை (Junior Research Fellowship - JRF) பெறுவதற்கு தகுதியைத் தீர்மானிக்கும் தேசிய அளவிலான போட்டியாகும். தேசிய தேர்வு முகமை (NTA) இந்தத் தேர்வை நடத்துகிறது.


UGC NET டிசம்பர் தேதி 2025: தேசிய தேர்வு முகமை (NTA) டிசம்பர் அமர்வுக்கான UGC NET விண்ணப்ப தேதிகளை அறிவித்துள்ளது. இதனைப் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


இந்த யுஜிசி நெட் தேர்விற்கான விண்ணப்ப தேதி அக்டோபர் 7 முதல் நவம்பர் 7, 2025 வரையும், கட்டணம் செலுத்த கடைசி தேதி நவம்பர் 7 ம் தேதி வரை எனவும் , மேலும், விண்ணப்ப திருத்த தேதிகள் நவம்பர் 10 முதல் 12, 2025 வரை என அறிவிப்பு வெளியாகி உள்ளது


யுஜிசி நெட் (UGC NET) தேர்விற்கு ugcnet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம். மேலும், 011-69227700/40759000 என்ற எண்களிலும் தொடர்புக்கொண்டும் பயன்பெறலாம்

Comments

Popular posts from this blog