Posts

Image
  அரசுப் பணிகளில் ஓய்வு பெற்றவர்கள் நியமனம் - அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!! அரசுப் பணிகளில் ஓய்வு பெற்றவர்களை நியமித்து இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் தி.மு.க. அரசிற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொல்வது ஒன்று, செய்வது ஒன்று" என்பதற்கேற்ப, மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்துவதையும், ஒப்பந்த முறையில் பணியமர்த்துவதையும், வெளிமுகமை மூலம் பணியமர்த்துவதையும் தி.மு.க. அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.  ஒரு வேளை ஒன்றைச் சொல்லிவிட்டு, அதற்கு மாறாக செயல்படுவதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி போலும். பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாகவோ, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ நிரப்பப்படும்.  இந்த முறையைக் கடைபிடிப்பதன்மூலம் அரசு
Image
  பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்! பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில், 360 கூடுதல் காலி பணியிடங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் அந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி மொத்தமாக 3192 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தற்போது கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'பட்டதாரி ஆசிரியர்/வட்டார வளமைய பயிற்றுநர் 2023, 2024 ஆம் ஆண்டில் 2222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 25.10.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.  இதனைத்தொடர்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை 25.11.2023 அன்று வெளியிடப்பட்டது. மேலும் 110 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு
Image
  பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு: விண்ணப்பிக்க ஜூன்.1 கடைசி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வை எழுத இயலாமல் போனவர்கள் மீண்டும் எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வுக்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான செய்திக் குறிப்பு பின்வருமாறு:  நடைபெறவுள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  தனித்தேர்வர்களிடமிருந்தும். பள்ளிமாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:  ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 16.05.2024 (வியாழக் கிழமை) முதல் 01.06.2024 (சனிக் கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்
Image
  அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் பட்டியல் தயாரிப்பு: டிஆர்பி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 200 காலி இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும். அதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்டில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று 2024-ம் ஆண்டுக்கான டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கோரியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, முதுகலை பட்டதாரி
Image
  நீட் தேர்வு 2024: ஹால் டிக்கெட் ரிலீஸ் எப்போது? கடந்த ஆண்டு தேர்வுக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு வெளியானது? தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் தேர்வுக்கான (NEET UG) ஹால் டிக்கெட்டை வெளியிட உள்ளது. மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதால், விண்ணப்பதாரர்களுக்கான சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். முன்னதாக, 2021 ஆம் ஆண்டில், நீட் தேர்வுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி அட்மிட் கார்டு வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டுக்கு, ஜூன் 29 ஆம் தேதி சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியிடப்பட்டது, ஜூலை 12 ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு, ஜூலை 17 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இறுதியாக, முந்தைய (2023) ஆண்டில், நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி தேர்வுக்கு முன்னதாக மே 4 அன்
Image
  பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இதேபோல் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனர். இதனிடையே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது. தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Image
 "அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு" - ராமதாஸ் குற்றச்சாட்டு அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது ஏற்கெனவே நலிவடைந்த நிலையிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி