Posts

Showing posts from December 28, 2019
ரயில்வே துறை வேலைகளுக்கு இனி RRB தேர்வு கிடையாது.! இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வேவில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி அந்த துறையில் வேலைகளில் சேருவதற்கு RRB தேர்வில் வெற்றிப்பெற வேண்டும். அதன்பின் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு ரயிவே துறையில் வேலை வழங்கப்படும். ஆனால் இனி RRB தேர்வு நடத்தப்பட மாட்டது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. RRB தேர்வுக்கு பதிலாக UPSC தேர்வு வாரியம் , ரயில்வே பணிக்கான தேர்வை நடத்தும் என ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்துள்ளார். UPSC எனப்படும் மத்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு மூலம் ரயில்வேயின் 5 பிரிவுகளில் ஊழியர்கள் நியமிக்கப்படுபவார்கள் என்றும் இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் ரயில்வேயின் IRMS எனப்படும் இந்தியன் ரயில்வே மேலாண்மை நிறுவனத்திற்கு சொந்தமான எந்த துறைகளில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவர் என வி.கே. யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) முடிவுகள் வெளியானது! மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) என்பது இந்திய அரசின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகும். இத்தேர்வு கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப் படுகிறது. 2019-ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - சிடெட் (CTET) டிசம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வினை 24,05,145 பேர் எழுதினர். இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள்cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.CTET தேர்வில் (22.55%) 5,42,285 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.