22 July 2017

அடுத்த ஆண்டு +2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை நடக்குமா? அமைச்சரின் 'பகீர்' பதில்!


அடுத்த ஆண்டு 2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை நடக்குமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்ததாவது:

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கும் 'நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள +2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை என்பதனை தொடர விரும்புவதாக நாங்கள் தெரிவித்துள்ளோம். ஆனால் அனைத்து மாநிலங்களும் ஒருமித்த குரலில் வலியுறுத்தும் பொழுது நாம் ஒன்றும் செய்ய முடியாது.

அதேபோல பட்ட மேற்படிப்புகளுக்கு நாம் 'டான்செட்' முறையினை பின்பற்றி வருகிறோம். அதனையும் மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை....மசோதா தாக்கல் செய்கிறது மத்திய அரசு…

5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு, விரைவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி மசோதா’ குறித்து மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது, கேட்கப்பட்ட கேள்விக்கு  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்து பேசியதாவது-

5 முதல் 8-ம் வகுப்பு வரை பயில்பவர்கள் கண்டிப்பாக தேர்ச்சிபெறச் செய்ய வேண்டும் என்கிற முறை முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதன்படி, மார்ச் மாதம் ஒரு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால், அவருக்கு மே மாதம் மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.

அப்போதும் அவர் தோல்வி அடைந்தால் மட்டுமே, அவர் அதே வகுப்பில் மீண்டும் படிக்க அமர்த்தப்படுவார். இது தொடர்பான மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

 கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 16-ன்கீழ் கட்டாயத் தேர்ச்சி என்ற கைவிடப்படுகிறது. மேலும், மாணவர்களை 8-ம் வகுப்பு வரை பள்ளியில் இருந்து நீக்குவதும் தடை செய்யப்படுகிறது.


குழந்தைகளை தேர்வில் தோல்வி அடைந்தால், மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைப்பது அவர்களை மனச்சோர்வடையச் செய்யும், சில நேரங்களில் பள்ளிப்படிப்பை கைவிட வேண்டியது இருக்கும் என்பதால் கட்டாயத் தேர்ச்சி கொண்டு வரப்பட்டது. ஆனால், சில மாநிலங்கள் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கட்டாயத் தேர்ச்சி முறையால்,மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறது என்று கவலைகொண்டன. இதையடுத்து இந்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன் அறிக்கை

வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும். மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். 
புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின் தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...