Posts

Showing posts from June 28, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 8 லட்சம் விண்ணப்பம் விற்பனை. ஜூன்.28 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எட்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதால்தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணியாற்ற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய தகுதித் தேர்வில் 150மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெறவேண்டும்.ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. ஆகஸ்டு 17-ந்தேதி தாள்-1 (இளநிலை ஆசிரியர் பயிற்சி) 18-ந்தேதி தாள்-2 (பட்டபடிப்புடன் ஆசிரியர் பயிற்சி) தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் 17-ந்தேதி முதல் அனைத்துமாவட்ட கல்வி அலுவலகங்களிலும் வழங்கப்படுகிறது.இரண்டு தேர்விற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு தகுதியும் உடையவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதித்தேர்வு எழுத விண்ணப்பங்கள் வாங்கி பூர்த்தி செய்து விண்ணப்பித்து வருகிறார்கள்.10 நாளில் 8 லட்சம் படிவங்கள் விற்பனையாகி உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜ