9 July 2022

 அதிர்ச்சி..! தற்காலிக ஆசிரியர் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி தெரியுமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு




தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, 2022 – 2023ஆம் கல்வியாண்டில், ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.


தற்காலிக ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும், தகுதியான நபர்கள் ஜூலை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி மாலை 5 மணி வரையில், அந்தந்த பகுதி மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படாத நிலையில், தற்போது தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதை எதிர்த்து ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தரப்பில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு கருத்துகளையும் கேட்ட நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் முதலில் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, இந்த வழக்கை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களுக்கு.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு.. 



தமிழக முழுவதும் குரூப் 2, குரூப் 2A தேர்வு கடந்த மே 21ஆம் தேதி நடந்து முடிந்தது. அதில் 11 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.


கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வை காட்டிலும் இந்த ஆண்டு அனைத்து கேள்விகளும் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு முடிவினை எதிர்பார்த்து தேர்வர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குரூப் 2 தேர்விற்கான முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருக்கின்றன.


இதனிடையே குரூப் 2 தேர்விற்கான கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. பொது பிரிவின வகுப்பை சேர்ந்த ஆண்கள் 158-163 வரையிலும், பெண்கள் 155-160 வரையிலும், BC வகுப்பை சேர்ந்த ஆண்கள் ஆண்கள் 158-163 வரையிலும், பெண்கள் 155-160 வரையிலும், MBC வகுப்பை சேர்ந்த ஆண்கள் 151-156 வரையிலும், பெண்கள் 145-150 வரையிலும், BC (M) வகுப்பை சேர்ந்த ஆண்கள் 147-152 வரையிலும், பெண்கள் 140-145 வரையிலும், SC வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையிலும், பெண்கள் 147-152 வரையிலும், SC (A) வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையிலும், பெண்கள் 138-143 வரையிலும், ST வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையிலும், பெண்கள் 138-143 வரையிலும் கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில 31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.



கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்கள் அரசு வழங்கும் விடுதியில் தங்கி பயில விரும்பினால் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என்று சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கென தனியே விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மாணவர்களுக்கு 11, மாணவிகளுக்கு 5 என மொத்தம் 16 விடுதிகள் உள்ளன. சென்னையில் இயங்கி வரும் கல்லூரிகளில் பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேர தகுதியுடையவர்கள். இவர்களில் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.


இவர்களுக்கு விடுதிகளில் எவ்வித செலவுகளும் இல்லாமல் பல சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளை பொறுத்தவரை, பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.


கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


கல்லூரி மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும்போது சான்றிதழ்களை அளிக்கலாம்.


ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5இடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கி பயிலவும் அனுமதிக்கப்படுவர். எனவே, மாணவ, மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடைலாம்.


இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...