Posts

Showing posts from June 7, 2019
TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வு நாளை துவக்கம்: 1,552 மையங்களில் 6 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வு, நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது. 1,552 தேர்வு மையங்களில், ஆறு லட்சம் பேர் எழுதுகின்றனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதி தேர்வில் முதல் தாளிலும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதி தேர்வின் இரண்டாம் தாளிலும், தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான, டெட் தேர்வு, நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த, 2010க்கு பின், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில், இதுவரை, தகுதி தேர்வு முடிக்காதவர்கள், இந்த தேர்வில் கட்டாயம்தேர்ச்சி பெற வேண்டும் என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள
Image
Flash News : TNPSC Gr4 தேர்வு தேதி அறிவிப்பு!!
TNPSC - குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - எத்தனை பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூன் 14ஆம் தேதி வெளியாகும்! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் என்றும்  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பதவிகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி ஆள் எடுத்து வருகிறது. தற்சமயம் இளநிலை உதவியாளர், தட்டச்சர்,  கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வருகிற ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. எத்தனை பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுக் கட்டணம் போன்ற இந்த தேர்வு பற்றிய பல்வேறு தகவல்களை www.tnpsc.gov.in அல்லது www.tnpsc.exams.i