Posts

Showing posts from December 3, 2016
TNPSC குரூப் 1 தேர்வுக்கு டிசம்பர் 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது. குரூப் 1 தொகுதியில் 85 காலியிடங்களை நிரப்புவற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-இல் நடைபெறுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி கடைசியாகும். வங்கி-அஞ்சலகத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 10 கடைசியாகும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட மாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். கவனமாக பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களை மாற
வாட்ஸ் ஆப்' வேணுமா போனை மாத்துங்க! தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும், 'வாட்ஸ் ஆப்'பை, பழைய மென்பொருட்களில் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 'வாட்ஸ் ஆப்' அறிமுகமாகி, ஏழு ஆண்டுகளுக்குள், உலகெங்கும், 100 கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இது, புதிய தொழில்நுட்பத்துக்கு மாற உள்ளது. இதனால், பழைய மென்பொருட்களில் இயங்கும் மொபைல் போன்களில், இனி, வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது.  முதல்கட்டமாக, பழைய விண்டோஸ், ஆண்ட்ராய், ஆப்பிள் மென்பொருட்களில் செயல்படும் போன்களில், வாட்ஸ் ஆப்பை இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்த ஆண்டு, ஜூன் வரை, பிளாக்பெரி, நோக்கியா ஏ - 40, நோக்கியா சிம்பியான் எஸ் - 60 மென்பொருள் உடைய போன்களில், வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, வாட்ஸ் ஆப் பயன்படுத்த வேண்டுமானால், மொபைல் போனை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை.
ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம் வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொருத்த வேண்டும். வங்கிகள் - வாடிக்கையாளர்கள் இடையிலான கே.ஒய்.சி திட்டத்திற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமை யாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்படப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் சலுகைக்கு... இதே போன்று, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல், ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்கள் சலுகைகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என ரயில