27 May 2022

 குரூப் 2, 2ஏ தேர்வு - விடைகள் வெளியீடு!!




குரூப் 2, 2A எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியாகியுள்ளது.


குரூப் 2, 2A பதவிகளுக்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் நடத்தியது . 11 ,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர் .


பொதுவாக , தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 நாட்களுக்குள் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியிடப்படும் . அதன்படி , தேர்வாணைய இணையதளத்தில் குரூப் 2 தேர்விற்கான உத்தேச விடைகள் (Answer Keys) வெளியாகி உள்ளது.


www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


 


உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். விடைகள் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம்.


பெறப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்திற்கான வல்லுநர்கள் கொண்ட குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். வல்லுநர் குழுவின் பரிந்துரையில் அடிப்படையில், இறுதியான விடைகள் முடிவுசெய்யப்பட்டு, அதன் பின்னர் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியானது தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.



ஜூலை 17ல் நீட் தேர்வு! நாடு முழுவதும் 18.72 லட்சம் பேர் விண்ணப்பம்! தமிழகத்தில் மட்டும் இத்தனை பேரா?




தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு

நடத்தப்படுகிறது.

தேசிய அளவில், பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் National Eligibility Entrance Test என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

2013 மே மாதம் 5ஆம் தேதி முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வை, முன்பு மத்திய அரசின் இடைக்கல்வி வாரியம் நடத்திய நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு
 
இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்படும். ஒட்டு மொத்தமாக 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும்.

2022- 2023 சேர்க்கை
 

இந்நிலையில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த 20 ஆம் தேதி முடிவடைந்தது. நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தில் திருத்தம் செய்வதற்கான செயல்முறை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் வரும் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

1.82 லட்சம் பேர் விண்ணப்பம்
 

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு மூழுவதிலும் இருந்து நீட் தேர்வுக்கு 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 2,57,562 பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர்.

தமிழக மாணவர்கள்
 

தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத 1,42,286 பேர் விண்ணப்பத்துள்ளனர். மேலும், தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 31,803 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 91,415 எம்பிபிஎஸ் இடங்கள், 26,949 பிடிஎஸ் இடங்கள், 50,720 ஆயுஷ் இடங்கள் என்று 1,69,084 இடங்களுக்கு மொத்தம் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை தகவல் வெளியிட்டுள்ளது.

 TNTET தேர்வு எழுதுபவர்களுக்கு.. தேர்வு தேதி குறித்து.. வெளியான முக்கிய தகவல்..!!!!



தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அனைத்து துறையில் இருந்து போட்டித் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகி வருகிறது.


அதன்படி தமிழகத்தில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இதற்கான தேர்வு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 எழுவதற்கான அறிக்கை மார்ச் 7ஆம் தேதி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 16 முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை பெறப்பட்டது.


இதற்கிடையில் பி.எட் இறுதி ஆண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.அதன்படி இந்த தேர்விற்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து TN TET தாள் 1 இல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் மற்றும் தாள் 2 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு தகுதி உடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வரை தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் சில வட்டாரங்கள் வருகின்ற ஜூலை மாதம் இறுதிக்குள் தேர்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்ததும் ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 TNPSC குரூப்-2 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு.. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு. முழு விவரம் இதோ.!!!!!!!




சுமார் 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதியன்று நடத்தியுள்ளது.


அந்த வகையில் 5529 பதவிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதி இருக்கின்றனர். அதேநேரம் குரூப் 2 தேர்விற்கு பதிவு செய்த 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.


தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவடைந்திருக்கின்ற நிலையில் இதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது. அந்த வகையில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு எழுதியதில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகின்றது. அதே சமயம் கடைசி கட் ஆப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருக்கின்றார்.


அதன்படி ஒரு பதவியில் கடைசி ஒரு இடத்திற்கு பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு கட்-ஆஃப் மதிப்பெண் 100 பேருக்கு மேல் பெற்றிருந்தால் அந்த நூறு பேரும் முதன்மைத் தேர்வை எழுதலாம். இந்த கணக்கின் அடிப்படையில் சுமார் ஆயிரத்து 5529 பணியிடங்களுக்கு 60,000 பேர் வரை தேர்ந்தெடுக்கப்படலாம். மேலும் இது தவிர முதல்நிலைத் தேர்வில் தமிழ் மற்றும் கணிதம் தவிர பொது அறிவு பகுதி கடினமாக இருந்ததால் கட்ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


அந்த வகையில் பொது பிரிவினருக்கு 145, BC பிரிவினருக்கு 140, MBC பிரிவினருக்கு 135 முதல் 140 வரையிலும், SC மற்றும் SCA பிரிவினருக்கு 132 முதல் 135 வரையிலும், ST பிரிவினருக்கு 130 வரையும் கட் ஆப் மதிப்பெண்கள் இருக்கலாம். மேலும் இதனுடன் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு இருக்கின்ற நிலையில், 20 வினாக்களுக்கு மேல் சரியாக விடை எழுதியவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகி கொள்ளலாம்.

 TNPSC Group 4: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வுக்கு புதிய சிலபஸ்; டவுன்லோட் செய்வது எப்படி?



TNPSC group 4 VAO exam How to download syllabus simple steps here: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய சிலபஸை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.


தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)


இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.


தேர்வு முறை


குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதனை கட்டாயம் தேர்வர்கள் எழுத வேண்டும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். முன்னர் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்தை தேர்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது தமிழ் மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. இதனை தேர்வர்கள் கண்டிப்பாக எழுதி குறைந்தப்பட்ச மதிப்பெண்ணை எடுக்க வேண்டும்.


அடுத்தப்பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை ஒத்துத்துள்ளது. இருப்பினும், புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே மொத்தம், இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.


அ. மொழிப்பாடம்


முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளில், இந்த பகுதி விருப்ப மொழிப் பாட பகுதியாக இருந்தது. அதாவது தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்காது. இருப்பினும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இதனால், தமிழ் மொழிப் பாடப் பகுதியில் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் தமிழ் மொழிப் பாடப் பகுதி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக உள்ளது. எனவே தமிழ் மொழிப் பாட பகுதி மதிப்பெண்களும் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம்.


தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.


ஆ. பொது அறிவு


அடுத்தப்படியாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.


புதிய சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?


முதலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும். https://www.tnpsc.gov.in/


அடுத்ததாக மெனு பாரில் Recruitment என்பதை கிளிக் செய்து, அதில் சிலபஸ் (Syllabus) என்பதில் திருத்தப்பட்ட பாடத்திட்டம் (Revised Syllabus) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


பின்னர் புதிய பக்கத்திற்குச் செல்லும், அங்கு குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட சிலபஸ் (Revised Syllabus) என்பதை கிளிக் செய்து, புதிய சிலபஸை டவுன்லோடு செய்துக் கொள்ளவும்.


எளிமையாக டவுன்லோடு செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள். https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf

 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கட்டாய தமிழ் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு






தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.


தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கட்டாய தமிழ் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு அளிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, TRB உட்பட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் தமிழ் எழுதுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அனைத்து தேர்வுகளும் தமிழ் மொழிகளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும் என இருந்த நிலையில் தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது



 ராணுவப் பள்ளியில் ஆசிரியர், எழுத்தர் பணிவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்



முதல்நிலை ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பைசாபாத்தில் உள்ள ராணுவப் பள்ளி வெளியிட்டுள்ளது.


ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



பணியிடங்கள் :

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGT) (அங்கிலம், இயற்பியல், புவியியல் ) பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடர்புடைய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் (TGT) - ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம் பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

முதல்நிலை ஆசிரியர் பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடக்கக் கல்வியில் 2 ஆண்டுகள் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

செயல்பாட்டு ஆசிரியர் (கலை மற்றும் கைவினைப் பொருட்கள்) சிபிஎஸ்இ 2018 சட்ட விதி அட்டவணை 7-ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இசை ஆசிரியர்

தலைமை எழுத்தர் ராணுவத்தில் எழுத்தர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் இதற்கு விண்ணப்பிப்பது சரியானதாக இருக்கும்.

மேல்நிலை எழுத்தர்(யுடிசி) பி.காம் முடித்தவர்கள் (அல்லது) ராணுவத்தில் 15 ஆண்டுகள் எழுத்தர் பணி அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இளநிலை எழுத்தர் (எல்டிசி) பட்டதாரிகள் (அல்லது) ராணுவத்தில் 10 ஆண்டுகள் எழுத்தர் பணி அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

துணை மருத்துவ ஊழியர்கள் 10+2 கல்வி, நர்சிங் படிப்பில் டிப்ளமோ, 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

ஆய்வு உதவியாளர் அறிவியல் பாடத்துடன் 10+2 கல்வியை முடித்திருக்க வேண்டும்.


மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2021 அன்று 40-க்கு கீழ் இருக்க வேண்டும். பணி அனுபவம் நிபந்தனைகள் கோரும் பதவிகளுக்கு 57க்கு கீழ் இருக்க வேண்டும்.



ராணுவப் பள்ளி வரைமுறையின் படி சம்பளம் கொடுக்கப்படும்.


விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை www.apsfaizabad.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.


வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே எழுத்து மற்றும் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும். விண்ணப்பங்களுடன், கல்வி தகுதி, பணி அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட அணைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி: ராணுவ பள்ளி, பைசாபாத்


07.06.2022 தேதிக்குப் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது.




 அறிவியல் தேர்வு; அனைத்தும் எளிமை : பத்தாம் வகுப்பு மாணவர்கள் குஷி





கணிதத் தேர்வால் மனரீதியாக கலங்கியிருந்த மாணவர்களுக்கு 'டபுள்' உற்சாகம் தரும் வகையில் எளிய வினாக்கள் நிரம்பிய வினாத்தாளாக அறிவியல் தேர்வு அமைந்ததால் அதிக மதிப்பெண்களை அள்ளலாம் என பத்தாம் வகுப்பு மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.மாணவர்கள் கூறியதாவது:


தேர்வு ரொம்ப எளிமை

கே.சிவானி, எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக்., பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண் உட்பட அனைத்து பகுதி வினாக்களும் எளிமையாக இருந்தது.


திருப்புதல் தேர்வில் வந்திருந்த சில வினாக்களும் இடம் பெற்றிருந்தன. நன்றாக படித்திருந்தால் 75 க்கு 75 மதிப்பெண் வாங்க முடியும். அனைத்து வினாக்களும் பாடப்புத்தகத்தின் பின் பகுதியில் இருந்து வந்திருந்தன. அனைத்து கேள்விகளும் தெரிந்தவையாக இருந்ததால் தேர்வு சுலபமாக இருந்தது.அனைவரும் பாஸ் தான்வி.செண்பகவள்ளி, அறிவியல் ஆசிரியர், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக்., பள்ளி, திண்டுக்கல்: வினாத்தாள் மிகவும் ஈசியாக இருந்தது.


திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த பெரும்பான்மையான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நன்றாக படிக்கும் மாணவர்கள் சென்டம் வாங்கலாம். சராசரியாக படிக்கும் மாணவர்கள் கூட எளிதில் பாஸ் ஆக முடியும். வினாத்தாள் அவ்வளவு எளிமையாக உருவாக்கியுள்ளனர்.





தேர்ச்சி பெறாமல் போவதற்கு வாய்ப்புகள் குறைவு.சென்டம் எடுக்கலாம்எஸ்.கார்த்திக் ராஜா,விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்: தேர்வு மிக எளிமையாக இருந்தது. அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் வினாக்கள் அமைந்திருந்தp. ஒரு மதிப்பெண் வினாக்களில் 10 வினாக்கள் ,2 மதிப்பெண் வினாக்களில் ஆறு வினாக்கள் , 4 , 7 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புக் பேக்கில் இருந்துதான் வந்திருந்தது. கட்டாய வினாவும் புக் பேக் தான்.


முதலாம் , இரண்டாம் திருப்புதல் தேர்வுகளில் இருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன . அனைத்தும் எளிமையாக இருந்ததால் சராசரியாக படித்திருந்தாலே சென்டம் எடுக்க முடியும்.முழு மதிப்பெண் பெறலாம் வீ.வீரக்குமார். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பி.ஆர்.ஜி .வேலப்ப நாயுடு மெட்ரிக்., மேல்நிலை பள்ளி, நெய்க்காரப்பட்டி, பழநி: புத்தகத்தின் பின் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒருமதிப்பெண் கேள்விகளில் இரண்டு கேள்விகளும், 2, 3 மதிப்பெண் கேள்விகளில் தலா மூன்று கேள்விகளும் பாடத்திட்டத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது.


கொரோனா நோய் தொற்றால் குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து கட்டாய பதிலளிக்கும் கேள்வியின் ஒரு பகுதி கேட்கப்பட்டிருந்தது. மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவது, எளிதில் வெற்றி பெறக்கூடிய தேர்வாக ஆக அமைந்திருந்தது.ஓரளவிற்கு எளிமை-ஏ.ஹரிகிருஷ்ணா, சக்திசாய் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, தங்கம்மாபட்டி, அய்யலுார்: கோதுமை தொடர்பான ஒரு மதிப்பெண் வினா ஒன்று மட்டும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து கேட்கப்பட்டிருந்தது. புத்தகத்தின் பயிற்சி வினாக்கள் பகுதியிலிருந்தும், பாடத்தின் உட்பகுதியில் இருந்தும் கலவையாக கேள்விகள் இருந்தன. ஓரளவிற்கு எளிமையாக இருந்தது .


தேர்வுத்தாளுக்குரிய மதிப்பெண் 75ல் 20 பெற்றாலே தேர்ச்சி உறுதி என்பதால் அனைவரும் எளிதாக தேர்ச்சி பெறலாம். சுலபமாக 100 எடுக்கலாம் ஆர்.எஸ். குருவர்ஷினி, மாணவி, மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வத்தலக்குண்டு: 1 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. பிற வினாக்கள் முழுவதும் சுலபமாக இருந்தது.


புத்தகத்திற்கு பின்னால் உள்ள வினாக்களே கேட்கப்பட்டிருந்தன. அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து கேள்விகள் இல்லை. கேள்விகள் எதிர்பார்த்ததைவிட எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு சரியாக எழுதி இருந்தால் சுலபமாக 100 மதிப்பெண் எடுக்கலாம்.

 TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான விடை குறிப்புகள்.! ஆன்லைன் மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.! முழு விவரம்




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 11,78,163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,83,285 பேர் தேர்வினை எழுதவில்லை. சுமார் 9,94,878 பேர் தேர்வு எழுதினர். அதாவது 84.44% பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2A தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல. கேள்விகள், மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் இல்லை.


தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இன்று மாலைக்குள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும். ஆட்சேபனைகளை தொிவிக்கும் போது ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பாட புத்தகங்களை மட்டுமே மேற்கோளாக காண்பிக்க வேண்டும். ஆட்சேபனைகள் குறித்து வல்லுநர்கள் குழு தேர்வுக்கான விடைகளை இறுதி செய்து அறிவிக்கும்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...