14 February 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து வழக்கு. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக ப்ரியவதனா உள்ளிட்ட 3 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணான 90 முதல் 104 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் ஒரு படிநிலையிலும், 105 முதல் 119 மதிப்பெண் எடுத்தவர்கள் ஒரு படிநிலையிலும் என புதிதாக 4 படிநிலைகளை உருவாக்கி, இதற்காக 2012-ம் ஆண்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்தவர்களையும், 104 மதிப்பெண்கள் எடுத்தவர்களையும் ஒரே படிநிலையாகக் கருதுவது தவறு என்றும், எனவே, இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா, இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் வரும் 28-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணுடன், 12 ம்வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்ட மதிப்பெண் பட்டியலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
TNTET - New weightage Go Now Released GO.Ms. No:29 Dt: 14.2.2014 55% to 60%=36 Mark
TNTET weightage Go Released 55% to 60%=36 Mark
FLASH NEWS: ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு. 

ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் 2 வாரங்களில் பதில்தர உத்தரவு .

சலுகைமதிப்பெண் தேர்ச்சியடைந்தவரை ஒன்றாக கருதும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை. சலுகை மதிப்பெண் வழங்கியதால் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதிப்பு என மனுதாரர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுதுள்ளார்  சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து ஆசிரியர் பயிற்சி முடித்த பிரியவதனா உட்பட 3பேர் மனு.
டிஇடி தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிப். 22 முதல் பயிற்சி 

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் பிப்ரவரி 22 முதல் 40 நாள்கள் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதற்காக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை (பிப்.14) முதல் வியாழக்கிழமை (பிப்.20) வரை தங்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்காக 40 நாள்கள் பயிற்சி வழங்க அரசாணையும் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பிறகு, அந்தப் பதிவுகளின் அடிப்படையில் மையங்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். 

பாடத்திட்டத்துக்கு ஏற்ப இந்தப் பயிற்சிக்கான பாடங்களை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்கள் தயாரித்துக்கொள்ள வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. இலவச தேநீர், உணவு: பயிற்சியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தேநீர், உணவு, சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வரை தமிழ், ஆங்கிலம், கல்வி உளவியல், சமூக அறிவியல் உள்ளிட்டப் பாடங்களில் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சுமார் 2,500 பேர் வரை பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் என்பதால் இவர்களுக்கான உணவு, பயிற்சி ஆகியவற்றை பயிற்சி மையத்திலேயே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு; ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும்-Dinathanthi

ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உண்டு. இதற்கான அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்படுகிறது. 

ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முன்பு 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெற வேண்டும். இது 60 சதவீதம். அதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி, தேர்ச்சி சதவீதத்தை 55 சதவீதமாக அறிவித்தார். 

அதைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண்ணை 82 ஆகநிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்தார். ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு உள்ளது. கேள்வி இப்போது தேர்ச்சி மதிப்பெண் 82 என்று அறிவித்ததால் புதிதாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்களா? அவர்களுக்கு வேலை உண்டா? என்ற கேள்வி புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எழுந்துள்ளது. 

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு :– தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் உண்டு சான்றிதழ் சரிபார்க்க ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். 

ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், மேலும் அவர்கள் பொதுத்தேர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொண்டு பின்னர் தான் ஆசிரியர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய, இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று யாரும் நம்பக்கூடாது. சான்றிதழ் சரிபார்க்க பின்னர் அழைப்பு அனுப்பப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
மாவட்டக்கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு :11 பணியிடங்களுக்கு TNPSC ஆன் லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு 

LAST DATE FOR APPLY Through online :12.03.2014 

OPEN MARKET- 9 posts SUBJECTS : TAMIL,ENGLISH ,MATHS, PHYSICS, CHEMISTRY ZOOLOGY ,BOTONY,HISTORY, GEOGRAPHY.- EACH 1 post 

AIDED SCHOOL TEACHERS: 2 posts SUBJECTS: PHYSICS, CHEMISTRY-EACH 1 post 

DATE OF PRELIMINARY EXAM: 08.06.2014

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...