Posts

Showing posts from September 24, 2015
மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம்: முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் மாநில அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதில்காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் தேசிய அளவிலான ‘நெட்’ தகுதித் தேர்விலோ அல்லது மாநில அளவில் நடத்தப்படுகின்ற ‘ஸ்லெட்’ தகுதித் தேர்விலோ கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரலாம். அதேநேரத்தில் ‘ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும்.ஸ்லெட் தேர்வை நடத்துவதற்கு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங் கப்படும். அந்த வகையில், தமிழகத்தில் ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு கடைசியாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஸ்லெட் தேர்வை நடத்தியது.இந்த நிலையில், 2015 முதல் 2018 வரை 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர