6 February 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது அரசாணை வெளியீடு. 

GO.25 SCHOOL EDUCATION (TRB) DEPT DATED.06.02.2014 - RELAXATION OF 5% MARKS TO THE CANDIDATES BELONGING TOSC/ST/MBC/BC/BCM & DE NOTIFIED COMMUNITIES ORDER
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அண்மையில் 5% மதிப்பெண் தளர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த கணக்கீடின்படி 82.5 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இதையடுத்து 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த மதிப்பெண் தளர்வு SC/ST/MBC/BC/BCM ஆகிய பிரிவினருக்கு பொருந்தும். மேலும் 2013ல் தேர்வு எழுதியவர்களுக்கு இந்த மதிப்பெண் தளர்வு பொருந்தும் என்றும் உத்தர்விடப்பட்டுள்ளது.
Flash News:ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு GO வெளியிடப்பட்டது ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு GO வெளியிடப்பட்டது.SC, ST, MBC, BC 82/150 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி
2,269 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2-ஏ தேர்வு அறிவிப்பு 

டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப் 2- ஏ தேர்வு மே மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பம் இன்று முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்படும். டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் சென்று இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை அஞ்சலகம் அல்லது வங்கி மூலம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுத்துறையிலுள்ள, 2 ஆயிரத்து 269 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.எழுத்தர், உதவியாளர் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ளது. நேர்காணல் இல்லாமல் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த தேர்வினை எழுத பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. 

தகுதித்தேர்வு மதிப்பெண் உள் ளிட்ட வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண்பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னு ரிமை வழங்க அரசு முடிவுசெய் துள்ளது. 

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 12,596 பேர், பட்ட தாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 14,496 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், இடஒதுக்கீடுப் பிரி வினருக்கான தேர்ச்சி மதிப்பெண் ணில் 5 சதவீதம் சலுகை வழங்கி தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. 

எனவே, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் இரு தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். சலுகை காரணமாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவர் என்ற விவரத்தை இடஒதுக்கீடு பிரிவுவாரியாக கணக் கெடுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

வெயிட்டேஜ் மார்க் மூலம் கட்ஆப் மதிப்பெண் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்த மார்க் 100. இதில்60 சதவீத மதிப்பெண் தகுதித் தேர்வுக்கும், எஞ்சிய மதிப்பெண்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரி யர் பட்டயத் தேர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.60 சதவீதம் தேர்ச்சி என்ற கணக்கீட் டின் கீழ் முன்பு அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. 

அப்போது கட்ஆப் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டது. இதில் 73, 74, 75, 76, 77 கட்ஆப் மதிப்பெண்ணில் ஏராளமானோர் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.ஒரே கட்ஆப் மதிப்பெண் வந்தால் தகுதித் தேர்வு மதிப்பெண் பார்க்கப்படுமா? பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படுமா? அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை பார்ப்பார்களா என்ற பல்வேறு சந் தேகங்கள் சான்றிதழ் சரிபார்ப் புக்கு சென்றுவந்த ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக, பணிநியமனப் பணிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால், பிறந்த தேதி அடிப்படையில், அதாவது வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக முன்பு வெளியிடப்பட்ட அரசாணையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை விரைவில் 

கவர்னர் உரைக்கு பதில் அளித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,ஆசிரியர் தகுதி தேர்வில்இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார். 

2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்)எடுக்க வேண்டும். இதில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82.5மதிப்பெண்ணாக குறைந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண்வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என்பதால் அரை மதிப்பெண் கிடைக்காது. எனவே, சலுகைக்குப் பிறகு 82 அல்லது 83, இவற்றில் எது தேர்ச்சி மதிப்பெண் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். 

சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணிலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 82 மதிப்பெண் என்பது சலுகைக்குப் பிறகான தேர்ச்சி மதிப்பெண்ணாக சி.பி.எஸ்.இ. நிர்ணயித்துள்ளதாக தேர்வர்கள் தெரிவித்தனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்சலுகை தொடர்பான அரசாணையில் இது குறித்து தெரியவரும் இதற்கிடையில் முதல்வர் வெளியிட்ட5 சதவீத மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை இன்றோ அல்லது நாளைக்குள்ளோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாணையில்தான் தேர்வர்களின் வினாக்களுக்கு விடைகிடைக்கும்
PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (06 .02.14) விசாரணைக்குவருகின்றன. 

வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது .

இதைத்தவிர முதுகலை ஆசிரியர் இதர பாடங்களில்  (except Tamil) வழக்குகளும் விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை மாலையில்தான் தெரியவரும்.
ஆசிரியர்கள் நான்காண்டில் பெறும் ‘டபுள் டிகிரி’ டெட் தேர்வு, பதவி உயர்வுக்கு பொருந்தாது: அரசு உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு 

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டெட்) ‘டபுள் டிகிரி’ தகுதியானது அல்ல என்ற அரசின் கொள்கை முடிவு சரியானதே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. ‘‘ஆசிரியர்கள் 4 ஆண்டுகளில் ‘டபுள் டிகிரி’ படித்ததை ஏற்க முடியாது. அந்த பட்டப்படிப்பானது ஆசிரியர் பணி, பதவி உயர்வு பெற தகுதியானது இல்லை. 
அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் தகுதியானது இல்லை’’ என்று தமிழக அரசு கொள்கை முடிவு அறிவித்தது. 

இதை ரத்து செய்யக்கோரி சுமார் 200 ஆசிரியர்கள், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்து அரசு உத்தரவு செல்லும், எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.இதை எதிர்த்து ஆசிரியர்கள், மேல் முறையீடு செய்தனர். 

அப்போது தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘டபுள் டிகிரி படிப்பு’ ஆசிரியர் தகுதிக்கு ஏற்றது அல்ல. 6 ஆண்டுகள் படித்தால்தான் டபுள் டிகிரி என்று கூற முடியும். 4 ஆண்டுகளில் டபுள் டிகிரி வாங்கியிருந்தால் செல்லாது. ஓராண்டு படித்ததும் ஒரு டிகிரி தருகிறார்கள். இது பெற்றதும் செல்லாதுÕ என்றார். 

 இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘‘டபுள் டிகிரி விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு செல்லும். ஓராண்டு படித்து ஒரு டிகிரி பெற்றால் அது செல்லாது என்று அரசு கூறியது சரியானது தான். எனவே மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியிருந்தனர்.
ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் சலுகை கண்துடைப்பு: கருணாநிதி விமர்சனம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவிகித மதிப்பெண் சலுகை அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பு என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளது என்றும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால், வேறு வழியின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவிகிதம் மதிப்பெண் சலுகை அளிக்க ஜெயலலிதா முன்வந்திருப்பதாகவும், உண்மையிலேயே இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மீது பற்றுக்கொண்டு இதனை அறிவிக்கவில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவிகித மதிப்பெண் சலுகை அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பு என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளது என்றும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால், வேறு வழியின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவிகிதம் மதிப்பெண் சலுகை அளிக்க ஜெயலலிதா முன்வந்திருப்பதாகவும், உண்மையிலேயே இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மீது பற்றுக்கொண்டு இதனை அறிவிக்கவில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
ஓராண்டு மட்டுமே படித்து இரட்டைப்பட்டம் பெற்றவர்,TET தேர்வு எழுத முடியாது.

"ஓராண்டு காலம் கொண்ட, "டபிள் டிகிரி' படிப்பை வைத்து, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது; ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்பது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இளங்கலை பட்டம்பெற்றவர்கள், "டபுள் டிகிரி' படிப்பு மூலம், ஓராண்டு காலத்தில், பட்டங்களை பெற்று, ஆசிரியர்பணி மற்றும் பதவி உயர்வு பெற்று வந்தனர். இதனால், மூன்று ஆண்டு படிப்பு முடித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது.இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த,தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' மேற்கண்டஉத்தரவை பிறப்பித்தது.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...