27 April 2022

 தொலைதூரக் கல்வி மூலம் ஸ்லெட்,நெட் தேறியவர்களுக்கும் உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்படுமா? - அமைச்சர் பொன்முடி விளக்கம்




தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தொலைதூரக் கல்வி மூலம் படித்து ஸ்லெட்,நெட் தேர்வுகளில் வென்றவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்படுமா?


என்ற கேள்விக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். வருங்காலங்களில் தமிழக அரசு அதற்கான ஏற்பாடுகளை நிச்சயமாக செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு துறையின் அமைச்சர்கள் ரகுபதி, சாமிநாதன் ஆகியோர் பதலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடட்டனர்.


முன்னதாக காலை 10 மணிக்கு பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.


அப்போது,சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்நாதன், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு யுஜிசி விதிகளின்படி, ஸ்லெட், நெட் அல்லது பி.எச்டி படித்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதன்படி ஏழை மாணவர்கள் பலர் தொலைதூர வழியில் கல்வி கற்று, ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்குச் சென்றனர். இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தொலைதூரக் கல்வி மூலம் படித்தது செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்து. எனவே 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முன்பாக தொலைதூரக் கல்வி மூலம் படித்து ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை வழங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "ஸ்லெட், நெட் தேர்வெல்லாம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தொடர்புடையது. யுஜிசிக்குத்தான் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் எல்லாம் உள்ளது. அவர்கள்தான் ஸ்லெட், நெட் தேர்வெல்லாம் நடத்துகின்றனர்.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தற்போது தொலைதூரக் கல்வி நடந்துகொண்டிருக்கிறது. அதைகூட நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று யுஜிசி அறிவித்திருக்கிறது. அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு யுஜிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது.


இந்த தொலைதூரக் கல்வியின் வாயிலாக, படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் எல்லாம் அதன்மூலம் படிப்பைத் தொடர்வதற்கு அதில் வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தினால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்த தொலைதூரக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது என்பது உண்மை.


இந்த தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்களுக்கு வேண்டும் எனக்கூறப்பட்டுள்ள தகுதிகளை அரசும் ஏற்றுக்கொண்டு, இதுதொடர்பாக யுஜிசிக்கு எழுதலாம், அதேபோல், தற்போது கவுரவ விரிவுரையாளர்களாக இருக்கின்ற பலர் ஸ்லெட்,நெட் தேர்ச்சிப் பெற்றும் உள்ளனர். எனவே அதுதொடர்பாகவும் பரிசீலித்து இந்த பணிகளிலே நியமிப்பதற்கான இந்த அரசு சிந்தித்துக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்த அரசு வருங்காலங்களில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்" என்று அவர் கூறினார்.

 இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லாப் போட்டித் தேர்வு பயிற்சி 





போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் தொடர்பாக சென்னையில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் ( TNPSC, SSC, IBPS, RRB etc) போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.


24-07-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ள TNPSC -Group IV தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தால் கட்டணமில்லாப் பயிற்சி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 வரை மூன்று மாதக் காலம் நடைபெற உள்ளது. மேற்படி பயிற்சிக்கு குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு மேற்படி தேர்விற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.


மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை. மேலும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் முறையே 500 மற்றும் 300 தேர்வர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 27-04 - 2022 முதல் 11 - 05 - 2022 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், பயிற்சியில் சேரவிரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் விபரம் விரைவில் வெளியிடப்பட்டு, இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். மே மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இந்தியாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.


இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.




  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...