Posts

Showing posts from May 14, 2014
சான்றிதழ் சரிபார்ப்பு பணி விடுபட்டவர்கள் "ஆப்சென்ட்' ஆசிரியர் தகுதி தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பில் விடுபட்டவர்களுக்கு வாய்ப்புகொடுத்தும், ஒருவர் கூட நேற்று வரவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு, கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. 90 சதவீதம் மார்க் பெற்றவர்களின், சான்றுகள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில் அரசு, தேர்ச்சி நிலையில் சலுகையாக, ஐந்து மார்க் குறைத்து அறிவித்தது. இதன்படி, ஈரோடுமாவட்டத்தில், 1,165 பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிஅடைந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த, ஆறு முதல், 12ம் தேதி வரை, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் துவங்கியது.தினமும், 250 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். பத்து மேஜைகளில், கல்வி அதிகாரிகள் பங்கேற்று, தலா, 25 பேர் வீதம், சான்றிதழ்களை சரிபார்த்தனர். விடுபட்ட ஆசிரியர்களுக்கு, இறுதி வாய்ப்பாக, மேலும் ஒரு நாள் (நேற்று) சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தகுதி வாய்ந்த, 35 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை, என்று உறுதியானது. நேற்று சி.இ.ஓ.