டி.இ.டி. தேர்வில் வென்றவர்களுக்கு ஜன., 20 முதல் சான்று சரிபார்ப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜன.,20 முதல் 27 வரை நடக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆக., 17, 18 தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றோர் விபரம் சமீபத்தில் வெளியானது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜன., 20 முதல் 27 வரை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில், முதன்மைக்கல்வி அதிகாரிகள் தலைமையில் நடக்கிறது.
ஜன.,20 முதல் 22 வரை முதல் தாளில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும் 23 முதல் 27 வரை (ஜன.,26 குடியரசு தினம் தவிர) 2ம் தாளில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசியர்களுக்கும் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடக்கிறது.
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, இடம் குறித்த தகவல், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்படி, பங்கேற்பவர்கள் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். இதை சரிபார்க்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரிபார்ப்பு முடிந்து, "சீனியாரிட்டி லிஸ்ட்" தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படும். இவர்களுக்கான பணி நியமன ஆணை, முதல்வர் கையால், சென்னையில் பிப்., 2வது வாரத்தில் வழங்கப்பட உள்ளது" என்றார்.
14 January 2014
கல்வித்துறை, டி.ஆர்.பி., மீது அவமதிப்பு வழக்கு: மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில்இருந்து விலக்களித்து, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்,என்ற கோர்ட் உத்தரவை அமல்படுத்தவில்லை என தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளருக்கு நோட்டீஸ்அனுப்பும்படி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
துறையூர் கொப்பம்பட்டி அசோகன் உட்பட 7 பேர் தாக்கல் செய்த மனு:
இளநிலை, முதுகலை பட்டங்கள்,பி.எட்., தேர்ச்சி, வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளோம். அந்த பதிவு மூப்பு அடிப்படையில்,பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், 2010 மே 12 முதல்14 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. நாங்கள் பங்கேற்றோம்.பின், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி.இ.,)பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என, 2010ஆக.,28 ல் உத்தரவிட்டது. இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை, 'ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்,' என 2011 நவ.,15 ல் உத்தரவிட்டது.என்.சி.டி.இ., உத்தரவிடும் முன்,எங்களின் பணி நியமன நடவடிக்கை துவங்கியது. என்.சி.டி.இ., நிபந்தனைகள் எங்களுக்கு பொருந்தாது.அதிலிருந்து விலக்களித்து, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்என, ஐகோர்ட்டில் மனு செய்தோம்.அட்வகேட் ஜெனரல், ''தற்போது காலிப் பணியிடங்கள் இல்லை.எதிர்காலத்தில் நியமனத்தின்போது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின்றி,மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்,'' என உறுதியளித்தார். இதன்படி 2013 ஆக.,18 ல் நீதிபதி, உத்தரவிட்டார். இந்த பொதுவான உத்தரவு எங்களுக்கு பொருந்தும்.
தற்போது, 13 ஆயிரம்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. நாங்கள் பணி நியமனத்திற்காக, காத்திருக்கிறோம். சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், இதுவரை எங்களை பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கவில்லை. கோர்ட் உத்தரவை அவமதித்ததாகக் கருதி, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்யார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டனர்.நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ்முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் திருநாவுக்கரசு ஆஜரானார். அரசிடம் விபரம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் சபீதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்யாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம்
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம்அடைந்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, ஆக.,17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தன. இதில், தாள் ஒன்றில், 12,596 பேரும், தாள் 2ல், 14496பேரும் தேர்ச்சி பெற்றனர். வினாக்கள் தெளிவாக இல்லாததால் ஏற்பட்ட குழப்பம் அடிப்படையில், பலர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இதில்,தாள் 2ல், 2ஆயிரத்திற்கும் மேல், கூடுதலாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.இவர்களை லோக்சபா தேர்தலுக்கு முன் பணிநியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பை அறிவித்தது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களாக, 'இளங்கலை பட்டப்படிப்பில், பல்கலை, கல்லூரிகள் வழங்கிய, செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றிதழ்களையும், பட்டப்படிப்பு சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளிக்கப்படாத சான்றுகள் அதற்குப்பின் ஏற்கப்படமாட்டாது,' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அரசு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பட்டப் படிப்பின் தொகுப்பு மதிப்பெண் சான்று மட்டுமே கேட்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கேட்டு, டி.ஆர்.பி.,அதிர்ச்சி ஏற்படுத்தியது. 1980 மற்றம் 1990களில் ரெகுலர் அல்லது தொலை நிலைக் கல்வியில் பட்டம் பெற்றோர், 80 சதவிகிதத்திற்கும் மேல், இதுபோன்ற செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றுகளை வைத்திருக்க வாய்ப்பில்லை. டி.ஆர்.பி.யின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் கூறியதாவது: பொதுவாக அரசுப் பணிகளுக்கும் டிகிரி சான்று மற்றும் மதிப்பெண் சான்று மட்டும் கேட்பது வழக்கம். கடந்த டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதே வழக்கம் தான் கடைபிடிக்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்றுகள் கேட்கப்பட்டுள்ளன, குழப்பமாக உள்ளது. 6வது செமஸ்டருக்கான சான்றே வழங்கமாட்டார்கள். 'டூப்ளிகேட்' சான்றிதழ் கேட்டு, கல்லூரிக்கு சென்றால், சம்பந்தப்பட்ட பல்கலையில் கேளுங்கள் என்கின்றனர். பல்கலைக்கு சென்றால், மீண்டும் அந்த சான்றிதழ் வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட சான்றிதழின் ஜெராக்ஸ் வேண்டும். ஒரு செமஸ்டர் சான்றுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். சான்று காணாமல் போனதாக போலீஸ் எப்.ஐ.ஆர்., வேண்டும் என, ஒரு மாதத்தில் நடக்க சாத்தியமில்லாத வழிகளை கூறுகின்றனர்.தேர்ச்சி பெற்றும் நிம்மதி இல்லை. அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, தெளிவுபடுத்த வேண்டும், என்றனர்
Subscribe to:
Posts (Atom)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...