Posts

Showing posts from October 22, 2013
Image
TET தேர்வு முடிவு எப்போது? வாரிய உறுப்பினர் அறிவொளி பதில்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் செவ்வாய் (அக்.22) மற்றும் புதன்கிழமைகளில் (அக்.23) நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 14 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.  மொத்தம் 2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.   தேர்ச்சி பெற்றவர்களில் வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில்1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய விவரம் மற்றும் அழைப்புக் கடிதம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.   சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செ
ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறையின் மீதான மோகத்தில், மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்க ஆர்வம் காட்டியதால், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக எல்காட் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், ஒப்பந்த அடிப்படையில், எல்காட் மூலமாகவே, நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர அரசுப் பணிக்கு மாற்றும் வகையில், சிறப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டன.  இதில், தேர்ச்சி பெறாதவர்களையும், சலுகை அடிப்படையில், நிரந்தரமாக்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "தேர்ச்சி பெறாதவர்களை, உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்" என, உத்தரவிட்டது.   அதனால், இரு மாதங்களுக்கு முன்,