22 August 2016

கவன ஈர்ப்பு போராட்டம்
நாள் :30/08/2016
இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்


மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!

*2010ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 34 ஆயிரம் பி.எட் பட்டதாரிகளில், பணி நியமனம் பெற்றவர்கள் போக 8 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தகுதி தேர்வில் விலக்களித்து நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

*அரசானை எண் :193,46,169,170ல் மொத்தம் 2054+2064+3816+1242=9176 பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

*NCTE 29.07.2011அன்று ஓர் அறிக்கை வெளியட்டது அதில் 23.08.2010 முன்னர் ஆசிரியர் நியமனம் குறித்து விளம்பரமோ அல்லது நியமன நடவடிக்கைத் தொடங்கிருந்தாலோ அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என அறிவுறுத்தியது.

*இம்மனுவை விசாரித்த நீதியரசர்கள் எலிப் தர்மராவ் மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு 07.07.2013 அன்று மனுதார்களுக்கு (94 பேர் ) தகுதித் தேர்வின்றி வருங்கால காலிப்பணியிடங்களில் பணி வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

*பள்ளிக் கல்வித்துறை 90 நாட்களுக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் 18.12.2013 அன்று மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் 23.09.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் காலிப்பணியிடம் மற்றும் நிரப்பிய விதம் குறித்து ஐந்து வினாக்களை எழுப்பி தீர்வு காண வேண்டும் எனவும் மனுதார்கள் வெற்றிபெறும் பட்சத்தில் முன்தேதியிட்டு பணி வழங்கிட வேண்டும் என வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்துகொள்ளவே பல மாதங்கள் ஆயிற்று. மேலும் நீதிபதி அக்னி கோத்ரி மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு மூன்று விசாரணை முடித்தபிறகு இவ்வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். பின்னர் நீதிபதி சிவஞானம் மற்றும் சொக்கலிங்கம் அமர்வு எங்கள் மனுவை விசாரித்து அதன் இறுதி வாதம் 04.09.2015 அன்று வந்தது. அன்று இருதரப்பினைரையும் எழுத்துபூர்வமாக அறிக்கை தர உத்தரவிட்டனர். இதன் இறுதி தீர்ப்பு 03.11.2015 அன்று வெளியானது. அதில் இம்மனுதார்களுக்கு பணி வழங்கப்பட்டால் இதேபோல் 20,000 பேருக்கும் தீர்வின்றி நியமிக்க வேண்டிவரும் என வழக்கை தள்ளுபடி செய்தனர்.

*இதில் சிறுதும் உண்மையில்லை. தீர்ப்பில் நிறைய குளறுபடிகள் உள்ளது என்பது ஆதாரத்துடன் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. உச்சநீதிமன்றம் தீர்வுக்கானச் சொன்ன மொத்த காலிப் பணியிடம் குறித்து நாம் எடுத்துவைத்த G.O 145 முதல் 170 வரையிலான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 25,572 அதில் நிரப்பப்பட்ட பணியிடங்கள் 16396 மீதமுள்ள காலிப் பணியிடம் 9176ஐ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

2.G .O 175 நாள் 08.11.2011ஐ கவனத்தில் கொள்ளவில்லை. மேற்கண்ட ஆணை அன்றைய தேதி வரை உள்ள காலிப் பணியிடம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பட வேண்டும் என தெளிவுபடுத்துகிறது.

3.G .O 20 நாள் :31.01.2011சான்றிதழ் சரிபார்பின் காலக்கெடுவை ஒரு வருடத்திற்கு நீடித்ததை கவனத்தில் கொள்ளவில்லை.

4. NCTE29.07.2011அன்று ஓர் அறிக்கை வெளியட்டது அதில் 23.08.2010 முன்னர் ஆசிரியர் நியமனம் குறித்து விளம்பரமோ அல்லது நியமன நடவடிக்கைத் தொடங்கிருந்தாலோ அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என அறிவுறுத்தியது கவனத்தில் கொள்ளவில்லை.

5. selection process பற்றி உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகு அதாவது நியமன முறை விவாதிக்க வேண்டாம் என அறிவுரையும் பின்பற்றவில்லை.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய போதிய நிதி கிடைக்கவில்லை அதனால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சீராய்வு மனு இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் விசாரனைக்கு வருகிறது.

*இப்பணியிடங்களை நிரப்ப கோரி மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .
84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லை-விஜயகாந்த்!

‘84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சமீபத்தில் சொல்லப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி மொத்தம் 84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சாதி வாரியாக தாழ்த்தப்பட்டவர்கள் 18,24,342, அருந்ததியினர்கள் 1,96,784, மலைவாழ் இனத்தினர்கள் 63,898, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் 22,00,498, இஸ்லாமியர்கள் 3,24,653, பிற்படுத்தப்பட்டோர் 34,53,868, மற்றவர்கள் 2,67,821, ஆக மொத்தம் 84 லட்சம் பேர் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் பல இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து தங்களுடைய விவரங்களை பதிவு செய்யாமல் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். கடந்த வாரம் சட்டசபையில் இதுகுறித்து விவாதம் வந்தபோது அதிமுக-வினரும் திமுக-வினரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு விவாதித்தார்களே தவிர, ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே அதிமுக ஆட்சியின்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதே தவிர, மாநாடு முடிந்து ஒரு வருட நிறைவு பெற உள்ள நிலையில்கூட, எந்த தொழிற்சாலைகளோ அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்போ இந்த அரசு ஏற்படுத்தியதாக நிரூபிக்கப்படவில்லை.

வேலைவாய்ப்பு இல்லாமல் பல லட்சம் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து அவர்களின் எதிர்காலமே மிகப் பெரிய கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது.

மேலும், அதன் விளைவாக மதுவுக்கு அடிமையாவதும், செயின் பறிப்பு, கொலை, கொள்ளை, போன்ற பல சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு ஆட்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அரசு இந்த பிரச்னைகளை மிக முக்கிய பிரச்சனையாக கருத்தில் கொண்டு, கல்லூரிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதும், மாவட்டம் வாரியாக தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை அவரவர்கள் தகுதிக்கு ஏற்ப வழங்கவேண்டும். லஞ்சம் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு சுலபமாக தொழில் தொடங்க வேண்டிய கட்டமைப்பு வசதிகள், சாலை வசதி, மின்சார வசதி போன்ற அனைத்து உதவிகளையும் வழங்கி உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதுபோன்ற மக்களின் முக்கிய பிரச்னைகளை சட்டசபையில் பேசி மக்களுக்கு நன்மை பயக்கும் சட்டசபையாக இருக்க வேண்டுமே தவிர, ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக அளிக்கக்கூடிய அரசாகவே உள்ளது.

நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்

பி.எட்., படிப்புக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பிலுள்ள, ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டு, 3,736 பேர் பி.எட்., படிக்க விண்ணப்பித்துள்ளனர். சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்தும் இந்த கவுன்சிலிங், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.நாளை,

தமிழ் மற்றும் ஆங்கிலம்; நாளை மறுநாள், வரலாறு பாடம் மற்றும் பி.இ., - பி.டெக்., முடித்தவர்களுக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கிறது; 25ம் தேதி அரசு விடுமுறை. பின், 26ம் தேதி தாவரவியல் மற்றும் விலங்கியல்; 27ல், இயற்பியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல்; 28ல் வேதியியல், புவியியல், கணினி அறிவியல்; 30ல் கணித பாடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...