25 December 2022

 Guest Lecturer Jobs: அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி- விவரம்




அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.



இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (டிசம்பர் 27) கடைசித் தேதி ஆகும். 


தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 


இப்பணியிடங்கள் தவிர, மீதி காலியாக உள்ள 1,895 பணியிடங்களுக்கு தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த காலிப் பணியிடங்களுக்கு கவுரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று, அதில் இருந்து கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர். உதவிப் பேராசிரியர் பணி இடத்திற்கான கல்வித் தகுதி பெற்றவர்களும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 


தேர்வர்கள் தங்கள் விண்ணப்பித்தை இணையதளத்தில் பதிவிட வசதியாக http://www.tngasa.in என்ற இணையதளம் டிசம்பர் 15ஆம் தேதி அன்று உயர்கல்வித் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதே நாளில் இருந்து கவுரவ விரிவுரையாளர் பணியில் சேரத் தகுதி பெற்ற தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (டிசம்பர் 27) கடைசித் தேதி ஆகும். 


ஊதியம் என்ன?


இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும். 


கல்வித் தகுதி என்ன?


* 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டத்தை முடித்திருக்க வேண்டும். 


* நெட் / ஸ்லெட் அல்லது செட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 


அல்லது


* உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஏதேனும் ஒன்றில் பிஎச்.டி. பட்டத்தை முடித்திருக்க வேண்டும். 


கவுரவ விரிவுரையாளர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள https://www.tngasa.in/pdf/TNGAS-GL-Instruction%20Tamil%202.0_15.12.2022_11.23AM%20(1).pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


பாடம் மற்றும் மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்களை அறிந்துகொள்ள https://www.tngasa.in/pdf/1895%20Guest%20Lecturer%20Allotment%20District%20Wise.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


கூடுதல் விவரங்களுக்கு: http://www.tngasa.in

 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- வைகோ




மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை உள்ளிட்ட பாடங்களை கற்பிக்க 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக மொத்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.


பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக அவர்களை வறுமையில் இருந்து விடுவிக்க, அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிடர் கழக அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்.


மூன்றாம் நாள் பொங்கல் பரிசாக, அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து, 12,000 குடும்பங்களுக்கு விளக்கேற்ற வேண்டும். அவர் கூறியது இதுதான்.கோரிக்கை விடுத்து வந்தனர்.


 TNPSC : இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் இறுதி முடிவுகள் வெளியீடு




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கான பணி நியமன இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கு மொத்தமாக 50 காலிப்பணியிடங்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


இப்பணிகளுக்கான அறிவிப்பு 25.08.2021 ஆம் தேதியில் வெளியானது. இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 24.09.2021 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வு 07.05.2022 மற்றும் 08.05.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மேலும் தேர்வில் தகுதியானவர்களுக்கு வாய்வழி தேர்வு 01.12.2022 மற்றும் 02.12.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது.


தொடர்ந்து, அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு 15.12.2022 ஆம் நாள் கலந்தாய்வு நடத்தப்பட்டது. தற்போது காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 42 பேர்களின் முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த பணிகளுக்கு முதல் நிலை, முதன்மை மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் 06.11.2021 ஆம் தேதியில் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் முதன்மை தேர்வுக்குச் சென்றனர்.


 


அதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வு 07.05.2022 மற்றும் 08.05.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 467 பேர் முதன்மை தேர்வை எழுதினர். அதிலிருந்து வாய்வழி தேர்வுக்கு 103 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு தற்போது இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் 42 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வு, கலந்தாய்வு மற்றும் இட ஒதுக்கீடு படி காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 2023 பொதுத் தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் டிச.26 முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி?- முழு விவரம்



2023ஆம் ஆண்டு மார்ச்/ ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் (private candidates) டிசம்பர் 26 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 


தேர்வர்கள் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியான தனித்தேர்வர்களிடம் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு சென்று உரிய நாட்களில்‌ ஆவணங்களுடன்‌ நேரில்‌ சென்று விண்ணப்பங்கள்‌ ஆன்‌லைனில்‌ பதிவு செய்து கொள்ள வேண்டும்‌.


* ஏற்கனவே நேரடித்‌ தனித்தேர்வராக மேல்நிலை முதலாம்‌ ஆண்டு தேர்விற்கு விண்ணப்பித்து வருகை புரியாத, தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத தேர்வர்கள்‌ அனைவரும்‌, தற்போது மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதுவதற்காக விண்ணப்பிக்கலாம்‌.


* கடந்த ஆண்டு முதன்முறையாக நேரடி தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள்‌, தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்ச்சி பெறாத பாடங்களை எழுத விண்ணப்பிக்கும்‌பொழுது, அத்துடன்‌ மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வில்‌ அனைத்துப்‌ பாடங்களையும்‌ எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்‌


விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்‌ 


கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ சேவை மையங்களுக்கு தனித்‌ தேர்வர்கள்  நேரில்‌ செல்ல வேண்டும். 26.12.2022 (திங்கட்‌ கிழமை) முதல்‌ 03.01.2023 (செவ்வாய்‌ கிழமை) வரையிலான நாட்களில்‌ (31.12.2022 (சனிக்கிழமை) மற்றும்‌ 01.01.2023 (ஞாயிற்றுக்‌ கிழமை) நீங்கலாக ) காலை 10.00 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌ தங்களின்‌ விண்ணப்பத்தினைப்‌ பதிவு செய்துகொள்ள வேண்டும்‌.


தத்கல்‌ முறையில்‌ விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்‌ :


மேற்காண்‌ தேதிகளில்‌ விண்ணப்பிக்க தவறியவர்கள்‌ 05.01.2023 (வியாழக்‌ கிழமை) முதல்‌ 07.01.2023 ( சனிக்கிழமை) வரையிலான நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌அரசுத்‌ தேர்வுத்‌ துறை சேவை மையத்திற்கு நேரில்‌ சென்று ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.


தேர்வுக்‌ கால அட்டவணை


மார்ச்‌ , ஏப்ரல்‌ 2023, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும்‌ நாட்கள்‌ குறித்த தேர்வுக்‌ கால அட்டவணையினை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்து கொள்ளலாம்‌.


ஒப்புகைச்சீட்டு 


ஆன்‌லைனில்‌ விண்ணப்பத்தினைப்‌ பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு  வழங்கப்படும்‌. அதில்‌ குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை‌ பயன்படுத்தியே அரசுத்‌ தேர்வுத்‌ துறை பின்னர்‌ அறிவிக்கும்‌ நாளில்‌ தேர்வுக்‌ கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...