Posts

Showing posts from October 8, 2013
தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முக்கிய செய்தி : முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் இவர்கள் பணிசெய்வார்கள். தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் சம்பளம் பெறுவார்கள்.இந்த நியமனத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே உடனடியாக மேற்கொள்ளலாம். முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்–2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கைய
ஆசிரியர்கள் ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர். மெட்ரிக் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது.ஏற்கனவே,பணிபுரியும்ஆசிரியர்கள்,ஐந்துஆண்டுக்குள்,தகுதி தேர்ச்சி பெற வேண்டும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர். அங்கீகாரம்இல்லாத பள்ளிகளுக்கு,ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்,பிச்சை எச்சரித்தார். மூன்று மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டம்,திண்டுக்கல்லில் நடந்தது. இயக்குனர் பிச்சை பேசியதாவது: அங்கீகாரம் இல்லாத,மெட்ரிக் பள்ளிகளுக்கு,ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அங்கீகாரத்திற்கு,வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகளில்,மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர்,கழிப்பறை வசதி வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு,நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது.  மாணவர்களுக்கு உடல்,மன ரீதியாக தண்டனை அளிக்கக் கூடாது.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே,பணிபுரியும் ஆசிரியர்கள்,ஐந்து ஆண்டுக்குள்,தகுதி தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு பிச்சை பேசி
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்-சுப்ரீம் கோர்ட் உத்தரவு. மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், மாற்றுத்திறனா ளிகளுக்கு மத்திய, மாநில அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தாற்காலிக அடிப்படையில் 6,545 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவு தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 3,900 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தாற்காலிக அடிப்படையில் உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்திலும், பட்டதாரி ஆசிரியர்களை ரூ. 4 ஆயிரம் தொகுப்பூதியத்திலும் தாற்காலிகமாக நியமித்துக்கொள்ளவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார். இந்தப் பணியிடங்களை அந்தந்த பள்ளி அளவிலேயே தலைமையாசிரியர்கள் நிரப்பலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் கூறினார். தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், உயிரியல், தாவரவியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் 2,645 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு, நகராட்சிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலைப் பட்டதாரி