Posts

Showing posts from March 14, 2023
Image
  அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!! புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்-சில் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் பொருட்டு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி தரப்படும். கல்வித் தரத்தை மேம்படுத்த ஆறு முதல் 12ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்படும். விரைவில் இலவச மடிக்கணினி தரப்படும் என்று அறிவித்து உள்ளார்.
Image
  12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள்... வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..! தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு பள்ளிகளில் படித்த மாணவர்கள் எட்டு லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 49 ஆயிரத்து 599 மாணவர்கள் மொழிப்பாடத் தேர்விற்கு வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்களாக பதிவு செய்த 8 ஆயிரத்து 901 பேரில் ஆயிரத்து 115 மாணவர்கள் மொழிப்பாடத் தேர்வை எழுதவில்லை. பள்ளிகளில் படித்த மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை, வரும் ஜூன் மாதம் நடைபெறும் துணைத் தேர்வில் பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொழித்தாள் தேர்வுக்கு வராத மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் மூலம் கண்டறிந்து, அடுத்து வரும் பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளில் பங்கேற்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Image
  தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணி: தேர்வு நடத்தப்பட்டு 5 ஆண்டுகளாகியும் நிரப்பப்படாத தமிழ்வழி ஒதுக்கீடு இடங்கள் தமிழகத்தில் அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பணிகளில் 1,325 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு முதல்முறையாக போட்டித்தேர்வை நடத்தியது. அத்தேர்வு மூலமாக கடந்த 2019-ம்ஆண்டு ஓவியம், தையல், இசை சிறப்பாசிரியர் காலியிடங்களும், அதைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஆனால், பொது தேர்வுப் பட்டியலுடன் தமிழ்வழி ஒதுக்கீடு தற்காலிக தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்ட நிலையில், சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக அப்பட்டியல் பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று பின்னர் அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தன. இதற்கிடையே, பொதுத் தேர்வு பட்டியலில் ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் ஆகிய சிறப்பு ஒதுக்கீட்டு காலியிடங்களில் தகுதியான நபர