18 December 2021

 TNPSC பெண்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு.. உடனே பாருங்க..!!!!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முன்னதாக ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.




இந்த தேர்வில் முற்றிலும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். தற்போது அது குறித்த தகவல்களை வலைத்தளத்தில் அறியலாம்.


தேவையான விவரங்கள்:


1. விண்ணப்பதாரர்கள் 7-ம் வகுப்பு படிப்பவராக அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.


2. விண்ணப்பதாரர்கள் வயது 01.07.2022 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1/2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.


3. அதாவது 02.07.2009 அன்று முதல் 01.01.2011 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.


4.பதிவாளர்களுக்கான முதற்கட்டமாக எழுத்துத் தேர்வு வரும் 18.12.2021 அன்று நடைபெற உள்ளது.


5. இந்த TNPSC RIMC தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.


6. அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது.


7. நேர்காணல் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.


8. தேர்வு கட்டமாக General Candidates 600 ரூ மற்றும் SC/ST விண்ணப்பதாரர்கள் 555 ரூபாய் செலுத்த வேண்டும்.


தேர்வு நாள்:


ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு தேதி முன்பே அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (18.12.2021) இந்த நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவிகள் தேர்வுக்கு தேவையான ஆவணங்களை சரியாக கொண்டு செல்லவும், மேலும் தேர்வின் விதிமுறைகளை அறிவிப்பில் பார்வையிட்டு தெரிந்துகொள்ள அறிவுறுத்துகிறோம்.

 அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு.! பொது மாறுதல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!



அரசு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.


இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பொது மாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது மாறுதல்களை ஒளிவுமறைவின்றி 2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் நடத்திட பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 1-ம் தேதி ஆசிரியர்கள் – மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட வேண்டும்.


குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையிலும், ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ள தகவலின் அடிப்படையிலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதிக ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வில் 100 % பார்வைத்திறன் குறைபாடு உடைய ஆசிரியர்கள், 40 % பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆசிரியர்கள், டயாலிசிஸ் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்குச் சிகிச்சை பெறுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கலாம்.


விதவைகள், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கலாம். புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் 8 ஆண்டு கட்டாயம் ஒரு இடத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பணியிட மாறுதலில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். நிர்வாக மாறுதல் போடுவதற்கு அந்தத் துறை அலுவலர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அலகு விட்டு அலகு மாறுதல் ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்குரிய தடையின்மைச் சான்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் முன்னுரிமை கல்வி ஒன்றியங்களில் கட்டாயம் 5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன் பின்னர், மூன்றாண்டுகள் வேறு கல்வி ஒன்றியங்களில் பணி புரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு.. உடனடியாக ஒத்தி வைக்க தமிழக அரசிடம் சீமான் வலியுறுத்தல்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்ட...