Posts

Showing posts from July 8, 2023
Image
  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல, அரையாண்டு தேர்வானது டிசம்பர் 11 ஆம் தேதி முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 3 வது வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 9 ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் மற்றும் 10,11,12 ஆம் வகுப்புக்கான அலகு, திருப்புதல் தேர்வு ஆகியவை தொடர்பான முழு அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த தேர்வு அட்டவணைக்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Image
  5 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள ‘ஸ்லெட்’ தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் உயர் கல்வித்துறை தகவல்  கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வாக பல்கலைக்கழகமானிய குழு (யு.ஜி.சி.) மூலம் தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் 2 முறை தேசிய தகுதி தேர்வு என்று அழைக்கப்படும் 'நெட்' தேர்வை நடத்தி வருகிறது. இதேபோல், மாநிலங்களின் சார்பில் ஏதாவது ஓர் பல்கலைக்கழகத்தின் மூலம்‘ஸ்லெட்' என்று கூறப்படும் மாநில அளவிலான தகுதி தேர்வு (The State Level Eligibility Test (SLET)) நடத்தப்படுகிறது. இந்த ஸ்லெட் தேர்வு தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்ப டாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாகின. இந்த நிலையில் இதுகுறித்து உயர் கல்வித்துறை சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ஸ்லெட் தேர்வை இனிவரும் ஆண்டுகளில் முறையாக ஆண்டுக்கு ஒரு முறை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது தேர்வு நடத்த முடியாத நிலை இருக்கிறது. ஏற்கனவே 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட