Posts

Showing posts from October 30, 2013
நெட்- தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு  கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தேசிய அளவில் நடத்தப்படும் -நெட்- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்னர் அக்டோபர் 30 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.இப்போது இந்த கால அவகாசம் நவம்பர் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி குரூப்–2 தேர்வு டிசம்பர் 1–ந் தேதி நடத்தப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு  திட்டமிட்டபடி குரூப்–2 தேர்வு டிசம்பர் மாதம் 1–ந் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– குரூப்–2 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 2 (தொகுதி 2)–ல் உள்ளடங்கிய 1064 பதவிகளுக்கான அறிவிக்கையினை (எண் 14/2013) வெளியிட்டு அதற்கான முதல் நிலை எழுத்து தேர்வினை 1–12–2013 அன்று நடத்த திட்டமிட்டிருக்கிறது.   ஆனால், அதே நாளில் (1–12–2013) வேறு சில தேர்வு வாரியம்/ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளும் நடைபெற இருந்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி (குரூப்)–2 தேர்வினை வேறு ஒரு நாளில் நடத்துமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.   7 லட்சம் பேர் விண்ணப்பம் மேற்படி, கோரிக்கைகளை பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி–2 தேர்வுக்கு சுமார் 7 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மேல்
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு  தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில்,முடிவை வெளியிட தடை விதிக்கமுடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால்,நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தமிழக அமைச்சரவை மாற்றம்... தமிழக அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதா மாற்றியமைத்துள்ளார். அமைச்சர் கே.சி.வீரமணியிடம் இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறை தற்போது விஜயபாஸ்கரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.சி.வீரமணிக்கு பள்ளி கல்வி,விளையாட்டு, இளைஞர் நலத்துறையை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கர் நாளை மறு நாள் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைப்பட்டம் வழக்கு-ஒரு வருட வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாராணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு.  சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் நீதியரசர் இராஜேஸ் அகர்வால்மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்றுமதியம் 3.00மணியளவில் வரவேண்டிய இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு ஒரு வருட வழக்கறிஞர் ஆஜராகாததால் மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மீண்டும் நாளைக்கு விசாராணைக்கு வரவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.