Posts

Showing posts from June 8, 2022
Image
  மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்" - உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு! மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாதம் ரூ.7500 ஊதியத்துடன் மீண்டும் வேறு பணி வழங்கும் தமிழக அரசின் முன்மொழிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பிலான இடையீட்டு மனு உச்சநீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழகத்தில் சுமார் 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் இருந்த நிலையில்,அதில் 1800 பேர் இறந்து விட்டனர்.7000 பேர் 53 வயதைக் கடந்து விட்டனர்.1500 பேர் 57 வயதைக் கடந்துள்ளனர்.இந்நிலையில்,மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு முன்மொழிந்துள்ள ஊதிய அட்டவணை,ஏற்கனவே மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊதிய அட்டவணையை விட குறைவாக உள்ளது. மேலும்,கடந்த ஆட்சியில் வாழ்வாதாரம் இழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் குறித்து மாநில அரசு எதுவும் கூறவில்லை.இதனால்,மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாதம் ரூ.7500 ஊதியத்துடன் ம
Image
  பெற்றோர்களே கவனம்.. இனி LKG, UKG வகுப்புகள் அங்கன்வாடியில் கிடையாது.! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு..! தமிழகத்தில் சோதனை அடிப்படையில் 3 ஆண்டிற்குள் அங்கன்வாடிகளில் தொடங்கப்பட்ட LKG, UKG வகுப்புகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2,381 பள்ளிகளில் 52,933 குழந்தைகளை LKG, UKG வகுப்புகளில் சேர்ப்பதற்கு 3 ஆண்டிற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் எனவும், மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பொறுத்து திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என சத்துணவு மற்றும் சமூகநலத்துறை செயலாளர் மணிவாசகன் கடத்த 2018-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2019-20-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. மேலும் அரசாணை வெளியிடும் போது, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2019-20 ஆம் கல்வியாண்டிற்கு நிதியும் ஒதுக்கப்பட்டது. 2020 மார்ச் மாதம் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் கொரோனா மூன்று அலைகளின் போதும் மழலையர் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்து வந்தன.  2022 பிப்ரவரி மாதம் மீண்டும் தொடங்கப்பட்டன. கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் ம
Image
  அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் விபரம் சேகரிப்பு கல்வித்துறை உத்தரவு ஜூன் 8:தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2022 நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இணை இயக்குநருக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2021 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தை கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டு வருதல் கூடாது . கூடுதல் பெயர்களையும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தற்
Image
  முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். தஞ்சாவூரில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் 21-வது ஆண்டு பொதுக் குழு, மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு முதல் 5 நாட்கள் நல்லொழுக்கத்தைப் போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். அதன்பிறகு வழக்கம்போல வகுப்புகள் நடைபெறும். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பயம் இல்லாமல், தேர்வு எழுத முன்வர வேண்டும் என தெரிவித்தார்.