Posts

Showing posts from February 5, 2015
Special Article: ஆசிரியர்கள் என்றால் அடிமைகளா?? நகரின் மையத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட பெரிய தனியார் பள்ளியொன்றில் பயிலும் உங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள், உங்களுக்கோ, உங்களது பிள்ளைகளுக்கோ அல்லது இந்த சமுதாயத்துக்கோ மட்டுமே ஆசிரியர்களாக பார்க்கப்படுகிறார்கள். வெளியில் இருந்து பார்த்தால் அப்படித்தான் தெரியும்..உண்மையில் அந்தப் பள்ளி நிறுவனருக்கோ அல்லது அப்பள்ளியின் தாளாளருக்கோ அவர்கள் அடிமைகள் அல்லது, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள். *ஒரு சராசரி தொழிலாளிக்கு, ஒரு முதலாளியிடம் கிடைக்கும் நியாயமான மரியாதைகூட பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை. சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகள் இன்று பெரும் புகழோடும், வானுயர உயர்ந்து நிற்கும் கட்டடங்களோடும், எல்.கே.ஜி-க்கே என்ட்ரன்ஸ் எக்ஸாம் வைத்து சேர்க்கை நடத்தும் அசுர வளர்ச்சிகளுக்கும் பின்னால் இருப்பது மடிப்பு கலையாத முழுக்கை சட்டையும், சட்டைக்கு தோதான டையும் அணிந்தபடி பாடம் நடத்தும் ஆசிரியர்களும், வேலைக்குச் சென்று குடும்பத்தை கரை சேர்த்தாக வேண்டிய ஆசிரியைகளும்தான். 'எழுத்தறிவித்தவன
'நெட்' தேர்வு வினா முறையில் மாற்றம் இல்லை: யு.ஜி.சி., உதவி பேராசிரியர் பணிக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யால்நடத்தப்படும், தேசிய தகுதித் தேர்வான, 'நெட்' வினா முறையில், இந்த ஆண்டு மாற்றம் ஏதும் இல்லை. 'ஸ்லெட்' தகுதித்தேர்வு: கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய, தேசிய அளவில், யு.ஜி.சி.,யால், 'நெட்' மற்றும் மாநில அளவில், 'ஸ்லெட்' தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இரண்டு தேர்வுகளும் மூன்று தாள்கள் கொண்டவை. இதில், முதல் இரண்டு தாள், 'அப்ஜெக்டிவ்' முறையிலும், மூன்றாம் தாள், விரிவான விடை அளிக்கும் முறையிலும் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், விடைகளை திருத்துவதில் ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு, 'நெட்' தேர்வில், மூன்றாம் தாளையும், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் கொண்டதாக, யு.ஜி.சி., மாற்றியது. கடந்த ஆண்டில், 'நெட்' தேர்வு முறையில், மேலும் மாற்றம் செய்வது தொடர்பாக, மாணவர்கள், ஆய்வாளர்களிடம் யு.ஜி.சி., கருத்து கேட்டது. அதில் பலரும், மூன்றாம் தாளை விரிவான விடை அளிக்கும் வகையில் மாற்றக் கோரியதாக கூறப்படுக
குரூப் 1 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாநகராட்சி அறிவிப்பு குரூப் 1 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவிண்ணப்பிக்கலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு முதல், அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை மாநகராட்சி நடத்துகிறது. ஷெனாய் நகர் அம்மா அரங்கம், சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பயிற்சி மையங்கள் அதற்காக செயல் படுகின்றன. கடந்த ஜூலை 20ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வில், மாநகராட்சி பயிற்சி வகுப்புகளில் படித்த, 45 பேர் கலந்து கொண்டனர். இதில், மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, மாநகராட்சி சார்பில் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்று, குரூப் 1 முதன்மை தேர்வுக்கு செல்ல உள்ள மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலை தேர்வு எழுதியதற்கான நுழைவு சீட்ட