14 December 2014

TET: 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும், வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரிய மனுவுக்கு டி.ஆர்.பிஅளித்துள்ள பதில்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையில் உள்ள அரசு விதிகள்/ஆணைகள் பின்பற்றி ஆசிரியர் தெரிவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஆசிரியர் தேர்வுவாரிய அறிவிக்கை எண் 02/2014 நாள் 14/07/2014ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தெரிவுப்பணிகள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெறிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு தெரிவு முடிவுகள் 10/08/2014 அன்றுஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும், வெய்ட்டேஜ் முறையை இரத்து செய்வது என்பது அரசின் கொள்கை முடிவிற்குட்பட்டது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது...


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு: தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலியாக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் 2015, மார்ச் 7 க்குள் பதிவை புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 2011 முதல் 2013 வரை பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளிப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. இது போன்ற அறிவிப்பு வெளியான சில நாட்களில் அரசு உத்தரவு வௌ?யாகும். ஆனால் நான்கு மாதங்கள் ஆகியும் வராததால் பலர் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து 'தினமலர்' செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, '2011 முதல் 2013 வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், நாளை முதல் 2015 மார்ச் 7 க்குள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம்' என இயக்குனர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதுகலை பட்டதாரிகள்: நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதுகலை மற்றும் தொழிற்படிப்பு பதிவுதாரர்கள் மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவை புதுப்பிக்கலாம் என உதவி இயக்குனர் மகாராணி தெரிவித்துள்ளார்.


TET : என்.சி.டி.இ., உத்தரவில் மாற்றம்: கல்வித்துறை செயலர் மீது வழக்கு

TET : என்.சி.டி.இ., உத்தரவில் மாற்றம்: கல்வித்துறை செயலர் மீது வழக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் உத்தரவை செயல்படுத்தவில்லை' என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதாவிற்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ராஜபாளையம் இன்பக்குமார் தாக்கல் செய்த மனு: தேசிய ஆசிரியர் கல்விக்குழு (என்.சி.டி.இ.,) அறிவிப்பின்படி 2010 ஆக.,23 க்கு பின் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., முடித்து பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் தகுதித்தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டது. அதில் 2011 ஜூலை 29 ல் பள்ளிக்கல்வித்துறை சில மாற்றங்களை செய்தது. 'அந்த அறிவிப்பிற்கு பின் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரையறுக்கப்பட்ட 32 பாடங்களில் பட்டப்படிப்பு முடித்து பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதித் தேர்வு எழுத முடியும்' என தெரிவிக்கப்பட்டது. எனவே, 'தேசிய ஆசிரியர் கல்விக்குழு பிறப்பித்த உத்தரவை மட்டுமே செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அதில் மாற்றம் செய்யக்கூடாது' என உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.

'தகுதி அடிப்படையில் மனுவை பரிசீலித்து மூன்று மாதங்களுக்குள் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் உத்தரவு பிறப்பிக்க ஜூலை 24 ல் ஐகோர்ட் உத்தரவிட்டது; ஆனால் நடவடிக்கை இல்லை. முதன்மைச் செயலர் சபீதா மீது கோர்ட் அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஆர்.கிருஷ்ணசாமி, அரசு வக்கீல் குணசீலன் முத்தையா ஆஜராகினர். அரசுத்தரப்பில் ஜன.,5 ல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.


  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...