Posts

Showing posts from November 19, 2018
TNPSC - குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகளை மறுத்து 900 பேர் இணையத்தில் மனு: வரும் 20 வரை அவகாசம் குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகளை மறுத்து சுமார் 900 பேர் இணையதளத்தில் மனு செய்துள்ளனர். மேலும், இதற்கான கால அவகாசம் வரும் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் குரூப் 2 தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாள்களுக்குள் வினாத்தாள்களுக்கான உத்தேச விடைகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஒவ்வொரு முறையும் உத்தேச விடைகளை மறுக்கும் வாய்ப்பானது அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாகவே வழங்கப்படும். அதாவது, உத்தேச விடைகளை மறுப்பதற்கான ஆதாரங்களை அஞ்சல், மின்னஞ்சல் போன்றவற்றின் வழியாக அனுப்பி அவை பரிசீலிக்கப்பட்டு சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த நடைமுறைக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொள்வதால், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை எத்தனை பேர்: தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக இணையதள வசதியை (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்
NEET - நுழைவு தேர்வு பதிவுக்கு இன்னும் 10 நாளே அவகாசம்! மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடிக்கும், மாணவ - மாணவியர், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிக்க முடியும்.  தனியார் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற, தனியார் கல்வி நிறுவனங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, சிறப்பு பயிற்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசே பல லட்சம் ரூபாய் செலவு செய்து, சிறப்பு பயிற்சி வழங்குகிறது.  அடுத்த ஆண்டு, மே, 5ல் நடக்க உள்ள, நீட் தேர்வுக்கு, நவ., 1ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், கடைசி நேர பிரச்னைகளை தவிர்க்க, பதிவுகளை விரைந்து முடிக்குமாறு, மாணவர்களை தேசிய தேர்வு முகமை வலியுறுத்தியுள்ளது.