Posts

Showing posts from October 15, 2022
Image
  அதிரடி காட்டிய  ஆந்திர முதல்வர் கடந்த 1998ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ஆசிரியர் பணி வழங்குவதாக அரசாணை பிறப்பித்தார்.  சித்தூர் : ஆந்திரா முழுவதும் 7,887 பேருக்கு அரசு ஆசிரியர் பணி வழங்குவதாக தெரிவித்த முதல்வர் ஜெகன்மோகனின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த 1998ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ஆசிரியர் பணி வழங்குவதாக அரசாணை பிறப்பித்தார். இதனை வரவேற்கும் விதமாக சித்தூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர் சங்கத்தினர் முதல்வர் ெஜகன்மோகனின் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து இனிப்புகள் வழங்கினர். அப்போது, சங்க நிர்வாகிகள் பேசுகையில், 'மாநிலம் முழுவதும் டிஎஸ்சி பிரிவில் ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தோம்.கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு பணி வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், அவரது 5 ஆண்டுகால ஆட்சியில் எங்களுக்கு பணி ஆணை வழங்கவில்லை. முதல்வர் ெஜகன்மோகன் டிஎஸ்சி ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கதாக
Image
  பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் வரும் 22ம் தேதி பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்துகின்றனர்.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் 22ம் தேதி காலை 9:00 மணியளவில் நடக்கிறது. தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்கள் 2020, 2021 மற்றும் 2022ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 20 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக 16 ஆயிரத்து 557 ரூபாயும், உணவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளும், நிரந்தர பணி நியமனமும் வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.
Image
  TRB: 2,849 காலிப் பணியிடங்களுக்கு. இன்று காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்.! தமிழக அரசு அறிவிப்பு.! தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்கு, இயற்பியல் ஆகிய பாடங்களுக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்கு, இயற்பியல் ஆகிய பாடங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ் நகலுடன் வரவேண்டும்.  எழும்பூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ் பாடத்திற்கும், பள்ளி கல்வி துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆங்கில பாடத்திற்கும், சேத்துப்பட்டு MCC பள்ளியில் வணிகவியல் பாடத்திற்கும், அசோக் நகர் மேல்நிலை பள்ளியில் பொருளியல் பாடத்திற்கும், திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் மேல்நிலை பள்ளியில் கணக்கு பாடத்திற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இயற்பியல் பாடத்திற்கும் பணி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
Image
  சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் சமூக நலத்துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குனர் (பெண்கள் மட்டும்) பதவிக்கான எழுத்து தேர்வு (கணினி வழி தேர்வு) வருகிற 5ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கணினி வழி தேர்வு நிர்வாக காரணங்களால் தற்பொழுது சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு நாளன்று நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.