Posts

Showing posts from November 28, 2022
Image
  கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு மாற்றியமைப்பு.. காரணம் இதுதான் தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிந்த நிலையில் தற்போது நிர்வாக காரணங்களால் தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுளளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டன. பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 5ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோரின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 34 ஆகவும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்   இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, குறை
Image
  2,748 கிராம உதவியாளர் தேர்வு : ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி? தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி தேர்வு நடைப்பெறவுள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு நவம்பர் 30 தேதி எழுத்துத் தேர்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் 4 ஆம் தேதி தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. அக்டோபர் 10 ஆம் தேதி முதல் இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 21 வயது நிறைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கத் தகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக காரணத்தினால் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டு விண்ணப்பதார்களுக்கு குறுஞ்செய்தியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் கிரா
Image
  அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு : எந்த வகுப்புக்கு எப்போது தேர்வு? - முழு விபரம்! தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 நாள் முதல் 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும். டிசம்பர் இரண்டாம் வாரம் 15 ஆம் தேதி முதல் தொடங்கி 23ந் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளது. 6,8,10,12-ம் வகுப்புகளுக்குக் காலையிலும் 7,9,11- ம் வகுப்புகளுக்குப் பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  புதுவையில் காவலா் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் புதுவையில் 253 காவலா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோவு செய்யப்பட உள்ளனா். தகுதியானவா்கள் திங்கள்கிழமை முதல் (நவ.28) இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுவையில் 253 காவலா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோவு செய்யப்பட உள்ளனா். தகுதியானவா்கள் திங்கள்கிழமை முதல் (நவ.28) இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை காவல் துறை சிறப்புப் பணி அலுவலா் குபேர சிவக்குமாரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை காவல் துறையில் 253 காவலா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.  புதுவையைப் பூா்வீகமாக கொண்டவா்கள், வசிப்பவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் 83 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையாக தோச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் 18 முதல் 24 வயதுக்குள் பட்டவா்களாக இருக்க வேண்டும். ஓபிசி, எம்பிசி, பிசிஎம், இபிசி, பிடி ஆகிய பிரிவினருக்கு கூடுதலாக 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்