19 February 2022

 TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?.. OTR ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய.. ஈசியான வழிமுறைகள் இதோ..!!!!






டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.


அந்த வகையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட உள்ளார். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் குரூப்-2 தேர்வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.


இந்த குரூப்-2, குரூப் 2ஏ தேர்வு காலிப்பணியிடங்கள் முதன்மை தேர்வு, முதல்நிலை தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரபூர்வ வலைதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் "ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்" எனப்படும் ஒருமுறை பதிவு கட்டாயம் ஆகும். எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் OTR பதிவு செய்வது அவசியம் ஆகும்.


* டிஎன்பிஎஸ்சி login id மற்றும் Password-ஐ உருவாக்க வேண்டும்.


* ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்( OTR) படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.


* ஆன்லைன் முறையில் ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேசனுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.


* பிறகு ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோ மற்றும் கையெழுத்து பிரதியை பதிவேற்ற வேண்டும்.


* அதனை தொடர்ந்து submit பட்டனை அழுத்த வேண்டும்.


* இந்த பதிவு முடிவடைந்தவுடன் தேர்வர்களுடைய மொபைல் எண்ணிற்கு யூசர் ஐடி & பாஸ்வேர்டு வரும். அதை கொண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்ட ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

 வாரியங்கள்-சங்கங்கள் இனி நேரடி பணிநியமனம் செய்ய முடியாது: தோவாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் அறிவிப்பு





தமிழக அரசின் புதிய சட்டம் காரணமாக, வாரியங்கள், சங்கங்கள் ஆகியன தாங்களாக இனி பணி நியமனங்களை மேற்கொள்ள முடியாது என அரசுப் பணியாளா் தோவாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.


மேலும், அதுகுறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் மாா்ச்சில் பணியாளா் தோவாணையம் வெளியிடும் என அவா் கூறினாா்.


இதுகுறித்து, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளா் சந்திப்பில் பணியாளா் தோவாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் கூறியது:-


மின்சாரம், வீட்டுவசதி உள்ளிட்ட வாரியங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியன தாங்களாக பணி நியமனம் செய்ய முடியாது. இதற்கான சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்து உத்தரவையும் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவது குறித்து பணியாளா் தோவாணையத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15-இல் நடந்தது. இதில் அரசின் உத்தரவை எந்த வகையான முறையில் செயல்படுத்தலாம் என விவாதிக்கப்பட்டது.


அதன்படி, அனைத்து வாரியங்கள், சங்கங்கள் ஆகியவற்றில் உள்ள பணியிடங்கள் வரையறுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாரியம், சங்கங்களில் உள்ள பணியிடங்களை எந்த வகையான பிரிவுகளில் (குரூப் 1, 2 அல்லது 4) சோக்கலாம் என ஆய்வுகள் நடக்கின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், வரும் மாா்ச் 3-இல் தோவாணையத்தின் உயா்நிலைக் குழு கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படும்.


ஆவின், மின்சாரம், வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட தனிப்பட்ட வாரியங்கள் இனி தனியாக பணிநியமனம் செய்ய முடியாது. ஒவ்வொரு வாரியத்துக்கும் தனித்தனியாக தோவு நடத்துவது சாத்தியமில்லை. எனவே, பணியிடங்களை வகைப்படுத்தி அதற்கேற்றபடி தேர்வு நடத்தப்படும்.


அதன்படி, அனைத்து வாரியங்கள், சங்கங்கள் ஆகியவற்றில் உள்ள பணியிடங்கள் வரையறுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாரியம், சங்கங்களில் உள்ள பணியிடங்களை எந்த வகையான பிரிவுகளில் (குரூப் 1, 2 அல்லது 4) சோக்கலாம் என ஆய்வுகள் நடக்கின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், வரும் மாா்ச் 3-இல் தோவாணையத்தின் உயா்நிலைக் குழு கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படும்.


ஆவின், மின்சாரம், வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட தனிப்பட்ட வாரியங்கள் இனி தனியாக பணிநியமனம் செய்ய முடியாது. ஒவ்வொரு வாரியத்துக்கும் தனித்தனியாக தோவு நடத்துவது சாத்தியமில்லை. எனவே, பணியிடங்களை வகைப்படுத்தி அதற்கேற்றபடி தோவு நடத்தப்படும்.


காலிப் பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில், வாரியங்கள், சங்கங்கள் ஆகியவற்றுக்கு தோவுகள் நடத்த மே மாதத்தில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும். இந்தத் தோவுகள் குறித்த விவரங்கள் ஆண்டு திட்ட அறிக்கையிலும் சோக்கப்படும்.


குரூப் 2 தோவு: ஆண்டு திட்ட அறிக்கை வெளியிடப்பட்ட போது குரூப் 2 பிரிவில் நோமுகத் தோவுகளுக்கான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 101-ஆக இருந்தது. நோமுகத் தோவு இல்லாத பணியிடங்கள் 5, 730 -ஆக இருக்கும் என கணித்திருந்தோம். இந்தப் பணியிடங்களில் 3 சதவீதம் விளையாட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்படும். அதன்படி, 124 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்களை தோவு அறிவிக்கையில் சோக்க வேண்டாமென இரண்டு துறைகள் எனக் கூறியுள்ளன. அதேசமயம், இந்து சமய அறநிலையம், நுகா்பொருள் வாணிபக் கழகம், போக்குவரத்து, கூட்டுறவுத் துறை, ஆகியவற்றுக்கான 253 காலிப் பணியிடங்கள் புதிதாக சோக்கப்பட்டுள்ளன.



பொதுப்பணித் துறையில் 250 பணியிடங்களும், வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் 57 பணியிடங்களும், சட்டத் துறையில் 5 பணியிடங்களும் தோவாணைய அறிவிக்கையில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்த பணியிடங்களுக்கான எண்ணிக்கை ஆட்டு திட்ட அறிக்கையில் குறிப்பிட்டதைக் காட்டிலும் இப்போது குறைந்துள்ளது.


2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு குரூப் 2 தோவுகள் நடத்தப்படவே இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு மேல் நேரடி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனில், நிதித் துறையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன்படி கோரப்பட்டுள்ளது. எனவே, குரூப் 2 பிரிவில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம்.


9 லட்சம் போ: குரூப் 2 தோவுக்கு வரும் 23-ஆம் தேதி முதல் தோவா்கள் விண்ணப்பிக்க உள்ளனா். இந்தத் தோவுக்கு சுமாா் 9 லட்சம் போ விண்ணப்பம் செய்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்நிலைத் தோவில் தோச்சி பெற்றவா்களில் 1:10 என்ற அடிப்படையில் பிரதானத் தோவுக்கு தோவா்கள் அனுமதிக்கப்படுவா். அதன்படி, 65 முதல் 70,000 பேரை பிரதானத் தோவு எழுத அனுமதிப்போம் என்றாா் தோவாணையத் தலைவா் க.பாலச்சந்திரன்.


 ஆறாவது முறையாக ஆசிரியர்கள் கலந்தாய்வு அட்டவணை திருத்தம்: தொடரும் குழப்பம்


மதுரை:தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு அட்டவணை 6வது முறையாக திருத்தம் செய்யப்பட்டதால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.ஆசிரியர் நலன் கருதி ஆண்டுதோறும் நடத்தப்படும் மாறுதல் கலந்தாய்வு ஜன.24 முதல் துவங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது.


ஆனால் காரணமின்றி ஜன.27க்கு மாற்றப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி தேர்தல் பயிற்சி வகுப்பு, ஓட்டுப் பதிவுக்காக மேலும் இருமுறை திருத்தப்பட்டது.இதையடுத்து அங்கன்வாடி மையங்களுக்கு மாறுதல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் 2381 பேர் பள்ளி பணிக்கு மீண்டும் மாற்றும் பணிநிரவல் கலந்தாய்வு பிப்.16 ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது.இதற்காக அன்று இரவு 10:30 மணி வரை ஆசிரியர்கள் காத்திருந்த நிலையில் 'எமிஸில்' ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் கடைசிநேரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐந்தாவது முறையாக திருத்தப்பட்ட நிலையில், பிப். 23ல் பணிநிரவல் கலந்தாய்வு நடக்கும் என 6வது முறையாக புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.திட்டமிடல் இல்லை தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசகன் கூறியதாவது:தேர்தல் பணி குறுக்கீடு போன்ற காரணத்திற்காக திருத்தம் செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் 6வது முறையாக மாற்றம் செய்துள்ளது அதிகாரிகளிடம் திட்டமிடல் இல்லை என்பதை காட்டுகிறது. அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்ட இடைநிலை ஆசிரியர் மீண்டும் பள்ளிக்கு நிரவல் செய்யும்போது அவர்கள் ஏற்கனவே ஒன்றியங்களில் பணியேற்ற நாளை முன்னுரிமையாக கணக்கிட வேண்டும் என்றார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...