29 March 2017

உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சென்னை உயர் நீதிமன்ற உத்தர வின் படிதான் ஏப்ரல் இறுதிக்குள் 
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்குப் பள்ளிக்
 கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாகவும், தேர்வு நடத்துவதில் குழப்பம் உள்ளதாகவும், 
கடந்த 3 ஆண்டு களாக தகுதித்தேர்வு நடத்தப்பட வில்லை என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை 
வெளி யிட்டுள்ளார். 

தகுதித் தேர்வு தேர்ச் சிக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 
வழக்கு தொடரப் பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத்த இயல வில்லை.தமிழக
 அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இன்னொரு வழக்கில் சென்னை உயர் நீதி்மன்றம், ஏப்ரல் மாதத்துக்குள் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று ஆணை வழங்கியது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பு கடந்த பிப்வரி 24-ம் தேதி வெளியிடப்பட்டது. 
ஜுன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் காலி யிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட தேதி களில் தகுதித் தேர்வு நடத்தப்படுகி றது. இத்தேர்வுக்காக 10 லட்சம் இளைஞர்கள் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை குழப்பும் வகையில் 
எதிர்க்கட்சி தலைவர் இதுபோன்று அறிக்கை வெளியிடுவதை 
தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது.


 'இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது. அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை. 

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது. அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது.எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

'செட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், மொழி பாடங்கள் உட்பட, 14 பாடங்களுக்கு, தமிழில் தேர்வு நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டதாரிகள், மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், நெட் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும். அதனால், மாநில மொழிகளில் நடத்தப்படும் செட் தேர்வையே, தென் மாநில பட்டதாரிகள் விரும்புகின்றனர். 


இந்த ஆண்டுக்கான செட் தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது. தேர்வுக்கான பதிவு முடிந்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. தமிழக அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை சார்பில், செட் தேர்வு நடத்தப்படுகிறது.செட் தேர்வு எப்போதும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு, மொழி பாடங்கள், அந்தந்த மாநில மொழிகளிலும், மற்ற பாடங்கள், ஆங்கிலத்திலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழில் தேர்வு நடத்தக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, தமிழில் தேர்வு நடத்தப்படும் 
என, தெரசா பல்கலை உறுதியளித்தது. 

மொத்தம் உள்ள, 25 பாடங்களில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய, ஐந்து பாடங்களுக்கும், அந்தந்த மொழிகளில் நடக்க உள்ளது. பொது தாள், வணிகவியல், பொருளியல், கல்வியியல், புவியியல், வரலாறு, மனையியல், ஊடகவியல், சட்டம், மேலாண்மை, அரசியல் அறிவியல், மனோதத்துவவியல், சமூகவியல், சமூகப்பணி ஆகிய பாடங்களுக்கு மட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வேதி அறிவியல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், வாழ்க்கை அறிவியல், கணித அறிவியல், உடற்கல்வி அறிவியல், புவி அமைப்பியல், கடல் மற்றும் கோளரங்க அறிவியல் போன்ற பாடங்களுக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடக்க உள்ளது. 

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...