Posts

Showing posts from January 28, 2014
PG/TET I / TET II-வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 29 .01.14 ) முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க நீதியரசர் முடிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி இன்று 28 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி 200 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்து 5 வழக்குகளும் இதர படங்களில் 4 வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தன. வழக்குகளை விசாரித்த நீதியரசர் ஆர் சுப்பையா PG/TET I / TET II-வழக்குகளை நாளை( 29 .01.14ல்)முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க முடிவுசெய்தார்.  மேலும் சென்னை உயர்நீதி
PG/TET I / TET II-வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 29.01.14) முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க முடிவு விரிவான செய்தி விரைவில்...... Thanks to www.thamaraithamil.blogspot.com
ஆசிரியர் தகுதித்தேர்வில் உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் உடனடியாக இட ஒதுக்கீட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான ஆசிரியர் நியமன முறையை ரத்து செய்து அதற்கு மாற்றாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.  தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு மறுப்பு, போட்டித்தேர்வில் வினாத்தாள் குளறுபடிகள், ஆசிரியர்கள் நியமனத்தின்போது பொதுப்பிரிவில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுப்பு என பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின. புதிய நடைமுறையால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அரசு பள்ளி ஆ
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு கடிதம் dinathanthi ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வு வழங்க வேண்டும் என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினர்ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்ஆசிரியர் தகுதி தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் (60 சதவீதம்) பெற்றால் தான் தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். இது அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானது.அவர்களின் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை பொருத்து வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்பது இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு எதிரானது என்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு அளிக்கவேண்டும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை புகார் தெரிவித்தது. தளர்வு அளிக்க வேண்டும்இதைத்தொடர்ந்து மத்திய அரசின் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா,
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு நாளை (29.01.2014) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் வகையில், நாளை (29.01.2014)மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இம்மாதம் 20-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.  இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் வருகை புரியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும் வகையில் நாளை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதிபெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகைபுரியாத தேர்வர்களும், நாளை தத்தம் மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்கு உரிய ஆவணங்
PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று( 28 .01.14 ல்) விசாரணைக்கு வருகின்ற வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு PG,ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி இன்று. 28 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி 200 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்து 5 வழக்குகளும் இதர படங்களில் 4 வழக்குகளும் நாளை விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை நாளை மாலையில்தான் தெரியவரும்.  PARTICULARS OF WRITS GROUPING MATTERS- PAPER I ~~~~~~~~~~~~~~~~  1. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EX
டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா? 'வன்கொடுமை' பாயும்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், உத்தரவிட்டு உள்ளது. பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு, டி.இ.டி., தேர்வில், அரசாணையின்படி, இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்காதது குறித்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனருக்கு, புகார் அளித்தார்.  அரசாணை:   இந்த மனுவை ஆய்வு செய்து, மண்டல இயக்குனர், வெங்கடேசன், பள்ளி கல்வித் துறை செயலர் மற்றும் டி.ஆர்.பி., தலைவர் ஆகியோருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: என்.சி.டி.இ., (தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்) வழிகாட்டுதலை ஏற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, 181ல், டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீடு பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு, குறைந்தபட்ச மதிப்பெண்ணில் சலுகை அளிக்க வழி செய்யப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு வழங்காத அதிகாரி மீது நடவடிக்கை: தேசிய ஆணையம் வலியுறுத்தல் ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.  'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்' என்று தமிழகத்தை சேர்ந்த பொதுக் கல்விக்கான மாநில மேடை என்ற அமைப்பினர் தேசிய ஆதி திராவிடர் ஆணையத்திடம் புகார் தெரிவித்து இருந்தனர். அந்த புகாரை பரிசீலித்த தேசிய ஆணையம், பள்ளி கல்வி துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு கடந்த 23ம் தேதி கடிதம் அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடஒதுக்கீட்டு கொள்கையை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ப