குரூப் 2ஏ ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு
வரும் 29ம் தேதி நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2846 இடங்களுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்விற்கு 6 லட்சத்து 25 பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது
19 June 2014
ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க கல்வித் துறை பரிசீலனை
தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது.
இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது. இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பணியிடங்களை ஜூன் 26 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும் பணிநிரவல் 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்பிளஸ்' பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையுடன், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலனை நடக்கிறது.
மாவட்டம் தோறும் ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 26 சர்பிளஸ் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சேர்ந்து, கூடுதலாக 220 புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது," என்றார்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம்
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற உள்ளது. இதனால் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 2 நாள்கள் நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 21-க்கு பதிலாக ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும். ஆசிரியர்களின் பயணத்தைக் குறைக்கும் வகையில் இப்போது பணிபுரியும் மாவட்டத்திலிருந்தே தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது.
பிற கலந்தாய்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என இளங்கோவன் தெரிவித்துள்ளார். 530 பேருக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வில் 1,069 நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 286 பேர் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் பெற்றனர். மேலும் 101 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவும், 143 பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றனர்

Subscribe to:
Posts (Atom)
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு.. உடனடியாக ஒத்தி வைக்க தமிழக அரசிடம் சீமான் வலியுறுத்தல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்ட...
.jpg)
-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...