BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை- 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை-Jaya plus
சென்னை,கன்னியாகுமரி,நெல்லை, தூத்துக்குடி,மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஆசிரியர் பணி இடங்கள் காலி இல்லை.எனவே மேற்கண்ட மாவட்டத்தினர் 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை.
4.09.2014 ,5.09.2014 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவும்.
1 September 2014
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
சென்னை, தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை
இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சென்னை மற்றும் நெல்லை, தூத்துக்குடிஉள்பட தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆன்லைனில் கலந்தாய்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடக்கக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள 1,649 இடைநிலை ஆசிரியர்களுக்கும், 167 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு ஆன்லை னில் நடத்தப்பட இருக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி யிடங்களுக்கு இன்றும் (திங்கள் கிழமை), வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்குநாளை யும் (செவ்வாய்) கலந்தாய்வு நடைபெறும். இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங் களுக்கு 4-ம்தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும்.
9 மாவட்டங்களில் காலியிடம் இல்லை
ஆசிரியர் தேர்வு வாரியத் தால் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இருப்பிட முகவரி உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும்கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வின்போது, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் டிஆர்பி தெரிவுக்கடிதம் ஆகியவற்றை கண்டிப்பாககொண்டுவர வேண்டும்.
சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, பெரம் பலூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லாத தால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று (திங்கள்கிழமை) கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் வேறு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங் களுக்காக நாளை (செவ்வாய்க் கிழமை) தங்கள் மாவட்டத்தில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணிஒதுக்கீட்டு ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...