21 August 2014

TNTET :இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.

ஆசிரியர் பணி நியமனம்: இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம். தொடக்கக் கல்வித்துறையில் 845 பின்னடைவு காலியிடம், 830நடப்பு காலியிடங்கள் உள்ளன.சிறுபான்மை மொழிகளில் 102 பின்னடைவு காலியிடம், 72 நடப்பு காலியிடங்கள் உள்ளன.கூடுதல் தகவல்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
TET பட்டதாரி ஆசிரியர்கள் கைது. 4வது நாளாக சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை. ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவும் வலியுறுத்தல்.
104-க்கு இல்லை; 82-க்கு ஆசிரியர் பணியா? தி இந்து ‘உங்கள் குரலில்’ டி.இ.டி. தேர்வாளர்கள் புகார் கடந்த வாரம் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவில் 104 மதிப்பெண் எடுத்த மூத்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை எனவும், 82 மதிப்பெண் எடுத்த புதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளதாகவும் தி இந்து ‘உங்கள் குரலில்’ பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் புகார் தெரிவித்தனர். 2013 ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் மட்டும் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10,736 பேர் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பணிக்கு தேர்வாகி உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் 104 மதிப்பெண், 99 மதிப்பெண் எடுத்த பலருக்கு ஆசிரியர் பணி கிடைக்காத நிலையில், 82 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளதாக தி இந்து ‘உங்கள் குரலில்’ பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் தங்களது மனக்குமுறலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, கடந்தமுறை வரை நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண் வரை எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதிகம் பேர் தேர்ச்சி பெறாததால், இந்தமுறை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டு 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவித்தது. ஆனால், ஆசிரியர் பணி கிடைக்க பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண், டிகிரிக்கு 15 மதிப்பெண், பி.எட்.க்கு 15 மதிப்பெண் மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வில் 150 மதிப்பெண் எடுத்தால் 60 மதிப்பெண் எனவும் கணக்கிடப்பட்டது. இந்த மதிப்பெண் ‘கட்ஆப்’படி, இந்தமுறை ஆசிரியர் பணிக்கு தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய முறையால் ஆசிரியர் தகுதித்தேர்வில் 150-க்கு 104, 100, 99, 95 என கூடுதல் மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பிளஸ் டூ, டிகிரி மற்றும் பி.எட். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் இவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. அதனால், இந்தமுறை பெரும்பாலும் கடந்த 10 ஆண்டுகளில் பிளஸ் டூ, டிகிரி, பி.எட். படித்த புதியவர்களுக்கே ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், கல்வியில் சாதிக்க எத்தனையோ வாய்ப்பு வசதிகள் கிடைத்துள்ளன. அதனால், பிளஸ் டூ தேர்வில் 1000 மதிப்பெண் எடுப்பது சுலபம். ஆனால், கடந்த காலத்தில் கூடுதல் மதிப்பெண் எடுப்பது கடினம். அப்படியிருக்கும்போது, தற்போது அரசு கடைப்பிடிக்கும் புதிய தேர்வு முறையால் புதியவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பழையவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் எவ்வளவு கூடுதல் மதிப்பெண் எடுத்தாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவால் பணி கிடைக்க வாய்ப்பில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்னை எடுத்துக்கொண்டால் மட்டுமே பி.எட். படித்த எல்லோருக்கு ஆசிரியர் பணியில் சமவாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் பி.எட். படித்த சீனியர்களுக்கு ஆசிரியர் பணிக்கு வாய்ப்பே இல்லை. இந்த முறையை மாற்ற தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
டிஆர்பிக்கு மீண்டும் சோதனை : புதிய வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகும்? நெல்லையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆசிரியர் நியமனத்தில் 5 சதவீத மதிப்பெண் விவகாரம் தொடர்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோரும் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டா யம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஆசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு சோதனைகளும், தடைகளும் வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வுக்கு பின் பல்வேறு காரணங்களுக்காக தொரடப்பட்ட வழக்குகளில் சிக்கி, தேர்வு முடிவுகளை அறிவிப்பதிலும், தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடுவதிலும் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. விடைத்தாள் வழக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் வழக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை தொடர்பான வழக்கு என டிஆர்பி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் வழக்குகளை சந்திக்க வைக்கின்றன. இதனால் கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் நியமன நடைவடிக்கைகள் முழுமை பெறாமல் முடங்கி வருகின்றன. இது மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான வழக்குகளுக்கு சமீபத்தில் தீர்வு காணப்பட்டு, ஒருவழியாக ஆசிரியர் நியமனத்திற்கான தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இவர்களுக்கு விரைவில் பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை ஜெயகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்களுக்கான தகுதிகளை மட்டுமே நிர்ணயிக்க மத்திய அரசு என்சிடிஇ&க்கு அதிகாரம் அளித்துள்ளது. அதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்க அரசுகளை அனுமதிப்பது சட்டவிரோதமானது. எனவே, ஆசிரியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள் ளார். மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், பதில் கிடைத்து அடுத்த உத்தரவு வரும் வரை புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான நடவடிக்கைகள் தொடருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி தகுதி தேர்வு நடந்த நிலையில், ஒரு ஆண்டு கடந்த பின்னரும் ஆசிரியர் நியமனம் இழுத்தடிக்கப்படுவதால், அடுத்த தகுதி தேர்வு அறிவிப்பு வெளியாவதும் தாமதமாகி வருகிறது. இதனால், பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் அதிகரித்து வருகிறது. பள்ளிகள் திறந்து இரண் டரை மாதம் கடந்த நிலை யில், விரைவில் காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. பல பள்ளிகளில் பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், மாணவர்களும், பெற்றோரும் கவலையில் உள்ளனர்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...